‘பாய்ஸ்’ சித்தார்த் இன்னும் லவ் பண்றார்: நடிகர் கார்த்தி கலாய்ப்பு..
நடிகர் கார்த்தி நகைச்சுவை உணர்வு மிக்கவர். திரைப்பட நிகழ்ச்சி மேடைகளில் அவர் பேசியவை அதற்கு சான்று. அப்படியொரு நிகழ்வுதான் நடிகர் சித்தார்த் பற்றி அவர் கூறியது, இதோ..
கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் எம்ஜிஆர் ரசிகராக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சர்தார் 2 படத்திலும் கமிட்டாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்கவுள்ளார்.
இதனிடையே சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் உருவாகி, வருகின்ற 29-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள ‘மிஸ் யூ’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கார்த்தி,
‘தான் மணிசாரிடம் அசிஸ்டெண்டாக பணிபுரிந்தபோது, அவரது இயக்கத்தில் சித்தார்த் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். ஹீரோவாக இருந்தபோதிலும் அங்கிருந்தவர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்ததாகவும் பேக்கிரவுண்ட் செக் செய்து கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் மணி சார் தாங்க முடியாமல், ‘டேய்.. பேசாம அவனை நடிக்க மட்டும் சொல்லுங்கடா..’ என்றார்.
இவ்வாறு கார்த்தி தன்னுடைய மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அதேபோல தற்போது இந்த நிகழ்ச்சியிலும் அதே வேலையை சித்தார்த் செய்து கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டினார்.
அதாவது.. ‘இங்கேயும் லைட்டை திருப்புங்க, கதவை மூடுங்க.. என சித்தார்த் கூறிக் கொண்டிருப்பதாக கூறிய கார்த்தி, ‘டேய் நீ கொஞ்சம் அமைதியா இருடா’ என்று சித்தார்த்தை பார்த்து கூறியது, அரங்கத்தினரை சிரிப்பலையில் ஆழ்த்தியது.
இன்னும் லவ் செய்து கொண்டிருக்கிறார். ‘மிஸ் யூ’ படத்தில் மறுபடியும் ஒரு ஆக்சன் படமாக, லவ் பெயிலியர் பாடல் வைத்து, சரக்கு அடிக்கும் காட்சியை வைத்துள்ளதாகவும் படமானது.. தான் படித்த காலத்தில் பார்த்த சினிமா போல இருப்பதாகவும் கார்த்தி கூறியுள்ளார்.
‘பாய்ஸ்’ சித்தார்த் என்பதால் அவர் மட்டும் இன்னும் லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார். என்றும் பார்ப்பதற்கும் அப்படியே இருக்கிறார் என்றும் கூறிய கார்த்தி அவருக்கு லவ் படங்களில் நடிக்க இது வசதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்படி கார்த்தி பேசிய பேச்சினால், சித்தார்த் அவசரப்பட்டு ஆக்சன் கதையை தேர்வு செய்ய மாட்டார் என நம்பப்படுகிறது.