ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்தா?: அபிஷேக் பச்சனின் செம பதில், தற்போது வைரல்..
நெல்லை அள்ளி விடலாம், பேசிய சொல்லை அள்ள முடியாது. ஆதலால், யாராயினும் விடுகின்ற வார்த்தையில் கவனம் தேவை. இப்ப இந்த வாசகம் எதுக்குன்னா, தொடர்ந்து வாசிங்க தெரிஞ்சுக்குவீங்க..
அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நட்சத்திர தம்பதிகளுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார். இருவரும் கணவன், மனைவியாக இல்லற வாழ்வில் மகிழ்ந்து வருகின்றனர். மற்றவர்களுக்கு இருவரும் பிரபலம்.
ஆனால், ஒருவருக்கொருவர் மாறா அன்புடன் காதலாய் கசிந்துருகி பிஸியான நிலையிலும் நல்ல தம்பதியராகவே திகழ்கின்றனர். இதையெல்லாம் ஊடக வியாபாரத்திற்கு அவ்வப்போது வெளிச்சம் போட்டு காட்ட வேண்டுமோ என்னவோ.!
ஏனெனில்.. அண்மையில், ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாளுக்கு அபிஷேக்பச்சன் வாழ்த்து கூட சொல்லவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியானது. கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையில் விவாகரத்து ஏற்படவுள்ளதாகவும், அதற்கு முக்கிய காரணமே அபிசேக் பச்சன் தான் எனவும் ஹிந்தி ஊடகங்களில் கிசுகிசுக்கள் அதிகம் உலா வருகின்றது.
இந்நிலையில், அபிஷேக் தனது நடிப்பில் வெளியாகியுள்ள, ‘ஐ வாண்ட் டூ டாக்’ படத்தின் ப்ரோமோசனில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
‘கெட்டவன் கெட்டவனாக இருப்பதை நிறுத்தவில்லை என்றால், நல்லவன் நல்லவனாக இருப்பதை ஏன் நிறுத்தவேண்டும்?.
நான் மிகவுமே பாசிட்டிவான ஆள். என்னால் நெகட்டிவாக இருக்க முடியாது, நெகட்டிவிட்டியுடனும் இருக்க முடியாது.
என்னைப் பற்றி வரக்கூடிய நெகட்டிவிட்டி கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால், நான் அவர்களுக்கு பதில் சொல்வதிலேயே என் வாழ்க்கையை இழந்துவிடுவேன். நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது’ என்றார். அபிஷேக் பதில், பாலிவுட்டில் தற்போது வைரலாகி வருகின்றது.
இதன் வாயிலாக, விவாகரத்து என வதந்தி பேசிய வாய்களுக்கெல்லாம், பூட்டுப் போட்டு விட்டார்.