‘சிலந்தி-2’.. மீண்டும் இணையும் மாளவிகா மேனன் – ஆதிராஜன் கூட்டணி

Web Ads

6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “சிலந்தி – 2” திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஆதிராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மேனன் கதாநாயகியாக மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

முன்னதாக தமிழில் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்ற “சிலந்தி” படத்தை ஜி கம்பெனி சார்பில் சங்கர் பழனிச்சாமி தயாரித்திருந்தார். அந்த வெற்றிக் கூட்டணி தற்போது “சிலந்தி – 2” மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய 6 மொழிகளில் உருவாகும் இந்த படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் த்ரில்லர் ஜானரில் தயாராகி வருகிறது. பல மொழிகளில் பிரபலமான முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு கம்போடியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெறவுள்ளது. மேலும், பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

“லோகா”, “காந்தாரா” போன்ற படங்களின் காட்சியமைப்பை ஒத்த பாணியில் உருவாகும் இந்தப் படத்தில், 30 நிமிடங்களுக்கு மேல் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்துடன் பிரமாண்டமாக உருவாகும் “சிலந்தி – 2”, இயக்குநர் ஆதிராஜன் எழுதி இயக்கும் ஐந்தாவது திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.