புதிய அத்தியாயத்தை தொடங்கும் சமந்தா

முன்னணி நடிகை சமந்தாவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான அத்தியாயம் தொடங்கியுள்ளது. புதிய முயற்சிகளுக்கும், வித்தியாசமான கதைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வரும் அவர், தற்போது சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) உடன் இணைந்துள்ளார்.
2026-ம் ஆண்டை புதிய தொடக்கங்களின் ஆண்டாக மாற்றியுள்ள சமந்தா, தனது வழக்கமான பாதையிலிருந்து விலகி, புதுமையான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்த வரிசையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் சோனி லிவ் தமிழுடன் அவரது புதிய கூட்டணி உருவாகியுள்ளது.
இந்த கூட்டணி தொடர்பான முழு விவரங்கள் தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சமந்தாவின் தனித்துவமான நடிப்பு மற்றும் சோனி லிவ் தமிழின் தரமான பொழுதுபோக்கு உள்ளடக்கம் இணையும் இந்த முயற்சி, ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சமந்தா கூறுகையில்,
“மாற்றங்களை ஏற்றுக்கொள்வதையும், புதிய தொடக்கங்களை வரவேற்பதையும் இந்த ஆண்டு எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. சோனி லிவ் தமிழ் உடன் இணைந்து இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு சுவாரசியமான புராஜெக்ட்டிற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதன் விவரங்களை மிக விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
சமந்தா – சோனி லிவ் தமிழ் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
View this post on Instagram