மலையாள படங்களில் ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை? ஸ்வாசிகா ஆதங்கம்

Web Ads

மலையாள சினிமாவில் தனக்கு வாய்ப்புகள் வழங்கப்படாதது குறித்து நடிகை ஸ்வாசிகா வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

“மலையாள சினிமாவுக்கு என்னுடைய தேவை இல்லை என்பதுதான் உண்மையான நிலைமை. நான் மலையாள சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றோ, தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றோ ஒருபோதும் கூறியதில்லை.

Web Ad 2

நான் நடித்த கதாபாத்திரங்கள் குறித்து பலரும் நல்லவிதமாகவே பேசியிருக்கிறார்கள். இருந்தாலும், எனக்கு ஏன் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதற்கான காரணம் அவர்களுக்குத்தான் தெரியும்” எனப் பேட்டி ஒன்றில் நடிகை ஸ்வாசிகா தெரிவித்துள்ளார்.