ராமாயணா படத்திற்காக 12 திரைப்பட வாய்ப்புகளை நிராகரித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

Web Ads

ரன்பீர் கபூர் நடிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்திற்காக, சுமார் 10 முதல் 12 திரைப்படங்களின் இசையமைக்கும் வாய்ப்புகளை நிராகரித்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், ஜெர்மன் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக ‘ராமாயணா’ படத்தின் இசைப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

Web Ad 2

மேலும், இப்படத்தில் இடம்பெறும் ‘ராவண தாண்டவம்’ இசைக்கோர்வையை இறுதி செய்வதற்கு முன்பாக 12 முதல் 13 முறை மாற்றியமைத்ததாகவும் தெரிவித்தார். இந்தப் படத்திற்காக மற்ற திரைப்படங்களின் வாய்ப்புகளைத் தவிர்த்ததில் தனக்குப் பெருமை இருப்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.