கிறிஸ்துமஸ் ரிலீஸுக்கு தயாராகும் ‘இரண்டு வானம்’

Web Ads

இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள ‘இரண்டு வானம்’ திரைப்படம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே அக்டோபர் 23-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது டிசம்பர் 24-ம் தேதி படம் வெளியாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Ad 2