சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் புதிய படத்தில் இணையும் ஸ்ருதி ஹாசன்!

Web Ads

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களையும் தரமான படைப்புகளையும் தொடர்ந்து வழங்கி வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது அடுத்த திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். ‘அஸ்வின்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தருண் தேஜா இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஷ்வின் இயக்கிய ‘மாவீரன்’, ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘3BHK’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களுக்கும் புதிய படைப்பாளர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வரிசையில், ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தை அந்நிறுவனம் தயாரிக்கிறது.

நடிகை, பாடகி, இசைக் கலைஞர் எனப் பன்முகத் திறமையுடன் இயங்கி வரும் ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், தற்போது சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளார்.

இப்படத்தை இயக்கும் தருண் தேஜா, வசந்த் ரவி நடிப்பில் வெளியான ‘அஸ்வின்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர். உளவியல் ஹாரர் பின்னணியில் உருவான அப்படம், வித்தியாசமான கதைக்களம், மிரட்டலான காட்சியமைப்புகள் மற்றும் ஒலி வடிவமைப்பால் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், தனது அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசனை கதாநாயகியாக இயக்கவுள்ளார்.

Web Ad 2

தயாரிப்பாளர் அருண் விஸ்வா, இயக்குநர் தருண் தேஜா, நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் இணையும் இந்தப் புதிய கூட்டணி, சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் மற்றுமொரு வித்தியாசமான படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், கதைக்களம் மற்றும் படப்பிடிப்பு குறித்த கூடுதல் விவரங்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.