‘கான் சிட்டி’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.
ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஷான் ரோல்டன் இசையமைப்பில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ மற்றும் லலிதா சுதா இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் ஸ்டைல், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ, முதல் முறை கேட்டவுடனேயே ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் பாணியில் உருவான பாடலின் இசையும் வரிகளும் “கான் சிட்டி” படத்தின் உலகத்தை மேலும் சுவாரஸ்யமாக காட்டுகின்றன. குறிப்பாக அர்ஜூன் தாஸ் காட்டும் ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் பாடலின் அனல் பறக்கும் பீட்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் “கான் சிட்டி”, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் பரபரப்பு கலந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாகவும், அன்னா பென் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்கு கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கி வரும் “கான் சிட்டி”, தற்போது “நான் தான் கிங்கு” பாடல் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.