விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ போஸ்டர்!

Web Ads

சென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படமான “ரவுடி ஜனார்த்தனா” படத்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கி வருகிறார். ரூரல் ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படம், ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு போஸ்டரில், மழையில் நனைந்தபடி கையில் துப்பாக்கியுடன் தீவிரமான தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா காட்சியளிக்கிறார். மேலும், அவரது நெஞ்சின் மீது கால் வைத்தபடி கீர்த்தி சுரேஷ் இருக்கும் காட்சி, படத்தின் காதலும் ஆக்‌ஷனும் கலந்த தனித்துவமான உலகத்தை பிரதிபலிக்கிறது.

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளனர்.

Web Ad 2

உலகம் முழுவதும் டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தை விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் மட்டுமின்றி, திரை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொழில்நுட்பக் குழுவில் தயாரிப்பு வடிவமைப்பாளராக டைனோ சங்கர், ஒளிப்பதிவாளராக ஆனந்த் சி. சந்திரன் பணியாற்றுகின்றனர். “ரவுடி ஜனார்த்தனா” திரைப்படத்தை ரவி கிரண் கோலா எழுதி இயக்குகிறார்.