ஆகஸ்டில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!

Web Ads

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம், தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக “ஐ அம் கேம்” இருக்கும் என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரம் மற்றும் படத்தின் உலகமே நவீன தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குநர் நஹாஸ் ஹிதாயத், தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படத்தை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.

RDX வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த திரைப்படமாக உருவாகும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய முயற்சியாக உருவாகி வரும் இப்படம், மலையாள சினிமாவின் முக்கிய பான்-இந்திய வெளியீடுகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

Wayfarer Films தயாரிப்பில் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஷஹபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். “லோகா” படத்தின் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் தயாரிக்கும் அடுத்த முக்கிய படமாகவும் இது அமைந்துள்ளது.

மேலும் சமீபத்திய படங்களில் வின்டேஜ் தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த துல்கர் சல்மான், “ஐ அம் கேம்” திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்துணர்ச்சியான மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்குகிறார். துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாக உருவாகும் இந்த படம், பான்-இந்திய அளவில் பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லராக தயாராகி வருகிறது.

இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.

ஏற்கனவே வெளியான முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. “ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான்-இந்திய படமாக வெளியாகவுள்ளது.

தொழில்நுட்ப குழு:

லைன் தயாரிப்பாளர் – பிபின் பெரும்பில்லி
ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலித்
இசை – ஜேக்ஸ் பிஜாய்
எடிட்டிங் – சமன் சாக்கோ
தயாரிப்பு நிர்வாகிகள் – சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன்
தயாரிப்பு வடிவமைப்பு – அஜயன் சாலிசேரி
மேக்கப் – ரோனெக்ஸ் சேவியர்
உடை வடிவமைப்பு – மஷார் ஹம்சா
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – தீபக் பரமேஸ்வரன்
உதவி இயக்குநர் – ரோஹித் சந்திரசேகர்
பாடல்வரிகள் – மனு மஞ்சித், விநாயக் சசிகுமார்
VFX – தௌஃபீக் (Eggwhite)
போஸ்டர் வடிவமைப்பு – டென் பாயிண்ட்
ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா
சவுண்ட் மிக்ஸ் – கண்ணன் கணபதி
ஸ்டில்ஸ் – எஸ்.பி.கே
மார்க்கெட்டிங் தலைவர் – விஜீத் விஸ்வநாதன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்