வைபவ் நடித்துள்ள ‘மாறுவேஷம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Web Ads

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படமான ‘மாறுவேஷம்’, யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து ஓநைரோமன்சி பிக்சர்ஸ் சார்பில், மன்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தில் வைபவ் திலக் என்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மர்மமான கொலை வழக்கின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையை அவர் கண்டறியும் முயற்சியில் எதிர்பாராத திருப்பங்கள், மறைக்கப்பட்ட அடையாளங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன.

Web Ad 2

வைபவுக்கு ஜோடியாக வியானா நடித்துள்ள நிலையில், ராம்கி, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியான், ஜார்ஜ் விஜய், இந்துமதி, மு. ராமசாமி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது யூ/ஏ சான்றிதழும் கிடைத்துள்ளது. இதையடுத்து ‘மாறுவேஷம்’ அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்பக் குழு:
ஒளிப்பதிவு – பாலாஜி கே. ராஜா
இசை – ராஜ்குமார் அமல்
படத்தொகுப்பு – என்.பி. ஸ்ரீகாந்த்
கலை இயக்கம் – மணிகண்டன் ஸ்ரீனிவாசன்
கூடுதல் திரைக்கதை – எஸ். இசையமுதன்