துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்’ புதிய அறிவிப்பு தேதியை வெளியிட்டது படக்குழு!

Web Ads

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘I Am Game’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை பிரம்மாண்டமாக வெளியிடும் நோக்கில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து Wayfarer Films பேனரில் தயாரித்துள்ள இப்படம், துல்கரின் திரைப்பயணத்தில் உருவாகும் முக்கியமான ஃபேண்டஸி த்ரில்லர் படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் பான்-இந்தியா வெளியீடாக வெளியாகிறது.

ஏற்கனவே வெளியான டிரெய்லர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. பிரம்மாண்டமான காட்சிகள், ஆக்‌ஷன் மற்றும் சேஸிங் காட்சிகளுடன் உருவாகியுள்ள டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Web Ad 2

தென்னிந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இப்படம், துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாமன் சாக்கோ படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைத்துள்ளனர்.

‘Lokah: Chapter 1 – Chandra’ வெற்றிக்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த படமாகவும், ‘RDX’ வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த படமாகவும் ‘I Am Game’ உருவாகியுள்ளது.

‘I Am Game’ – செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்!