பகத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் கேக்கு வாக்கு பாடல் வெளியானது!

Web Ads

பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble the Trouble) படத்தின் முதல் பாடலான ‘கேக்கு வாக்கு’ (Cakeu Walku) இசை வீடியோ வெளியாகியுள்ளது.

அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் எலெட்டி இயக்குகிறார். ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

Web Ad 2

கால பைரவா இசையமைத்துள்ள இப்பாடலை, கால பைரவா மற்றும் வாசி இணைந்து எழுதியதுடன், அவர்களே பாடியுள்ளனர். துள்ளலான இசையுடன் உருவாகியுள்ள இந்தப் பாடலில் ஃபஹத் பாசிலின் எனர்ஜியான நடனமும், சாராவின் பங்களிப்பும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

ஃபஹத் பாசில், சாரா, சௌரப் சச்தேவா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், வித்தியாசமான ஃபேண்டஸி என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. திரைப்படம் செப்டம்பர் 11, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.