குடும்பமாக, கூட்டணியாக சேர்ந்து கொள்ளையடிக்க வந்த கூட்டம் அல்ல: தவெக மாநாட்டில் விஜய் ஆவேசம்..

தவெக மாநாட்டில் விஜய் ஆவேசமாக பேசினார். அதன் விவரம் வருமாறு:
‘ஒரு முடிவோடு தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். பின்வாங்கும் எண்ணம் இல்லை. நோ லுக்கிங் பேக்’ என்று விஜய் தெரிவித்தார். ‘குடும்பமாக, கூட்டணியாக சேர்ந்து கொள்ளையடிக்க வந்த கூட்டம் அல்ல. சமூகத்திற்காக வாளேந்தி நிற்கும் கூட்டம் நாம்’ .
பெண்களை அரசியல் வழிகாட்டிகளாக ஏற்கும் முதல் அரசியல் கட்சி தவெக. ஒரு குழந்தை முன்பாக பாம்பை கண்டாலும் அந்தப் பாம்பை சிரித்தபடியே கையில் எடுத்து விளையாடும் அந்த குழந்தை. அதே போலத்தான் அரசியல் என்பது பாம்பு. அந்த பாம்பை பயமே இல்லாமல் கையில் எடுத்து விளையாட வந்திருக்கிறேன்.
மீடியாவில் ட்ரோல், சோசியல் மீடியாவில் ட்ரோல், ஆபாசமாக பேசுவது அல்லு சில்லு இதற்கெல்லாம் அசரும் கூட்டம் நாங்கள் இல்லை. யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு கூட்டம் அவர்கள் மீது ஒரு குறிப்பிட்ட சாயத்தை பூசி விட்டு, அண்டர் கிரவுண்ட் டீலிங் போட்டுக்கொண்டு, தேர்தல் நேரத்தில் அறிக்கை சவுண்ட் எல்லாம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
அந்த கட்சியின் ஏ டீம், இந்த கட்சியின் பி டீம் என்றெல்லாம் முத்திரை குத்தி, எங்கள் படையை வீழ்த்தலாம் என கனவு காண வேண்டாம்.
இவர்களுக்கு எப்போது பார்த்தாலும் பாசிசம் பாசிசம் பாசிசம். ஒற்றுமையாக இருந்த நம்ம மக்கள் மத்தியில் சிறுபான்மை பெரும்பான்மை எனப் பிரித்து வைக்கிறார்கள். அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா? என்றும் கேள்வி எழுப்பிய விஜய், நீங்களும் அவர்களுக்கு சளைக்காதவர்கள் தானே, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் விஜய்.ஆவேசமாகப் பேசினார் விஜய்.
