பல்பு வாங்கிய மாதவி, சூர்யா கொடுத்த ஷாக்,மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைகளத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா துணிக்கடையில் நந்தினிக்கு புடவை வாங்க விட்டுவிட்டு ஒரு போன் கால் வர அவர் வெளியே வருகிறார். நந்தினி இடம் கலெக்ஷன்களை காட்ட அவர் விலை அதிகமாக இருப்பதால் விலையை மட்டுமே பார்த்துவிட்டு இன்னொரு பக்கம் வருகிறார். அவர்களிடம் வேலை செய்யும் பெண் புது கலெக்ஷனா இருந்தா காட்டுங்க என்று சொன்னவுடன் இந்த டிசைன் உங்களுக்கு சூப்பரா இருக்கும் என்று சொல்ல, நந்தினி இது எல்லாமே விலை அதிகமா இருக்கு. கம்மியா 100, 200 ரூபாய்ல புடவை இல்லையா? என்று கேட்க இந்த காலத்துல வீட்டு வேலை செய்றவங்களே ஆயிரம் ரூபாய்க்கு தான் சேலை கட்டுறாங்க நீங்க கோடீஸ்வர வீட்டு மருமக, நீங்க இவ்வளவு சிம்பிளா இருக்கலாமா என்று வேலை செய்யும் பெண் கேட்கிறார்.
சூர்யாவிடம் வந்த வேலை செய்யும் பெண் அவங்க உங்களோட ஒய்ஃப் தானே அவங்க புடவை சூஸ் பண்ண தெரியாம தேடிக்கிட்டு இருக்காங்க ஆனா நீங்க ஒரு புடவை எடுத்துக் கொடுத்தீங்கன்னா கண்டிப்பா அவங்க எடுத்துப்பாங்க நீங்க போய் செலக்ட் பண்ணி குடுங்க அவங்களுக்கு மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்று சொல்ல சூர்யாவும் இதுவும் நல்ல ஐடியாவா தான் இருக்கு என்று அங்கே வருகிறார். உனக்கு புடிச்சிருக்கா மாலினி என்று கேட்க விலை அதிகமா இருக்கு சார் என்று சொன்னவுடன் அதை எல்லாம் பார்க்காத இங்க இருக்கிறது எல்லாத்தையும் பேக் பண்ணுங்க என்று, டேபிள் மேல இருக்கும் புடவை அனைத்தையும் பேக் செய்ய சொல்லுகிறார். பிறகு இருவரும் காரில் வீட்டுக்கு வருகின்றனர். சூர்யா மாலினி உனக்கு இந்த புடவை பத்தலைன்னா சொல்லு இன்னொரு டைம் இறக்கிடலாம் என்று சொல்ல அவர் எதுவும் பேசாமல் இருக்கிறார்.
பிறகு வீடு வந்தவுடன் நந்தினியிடம் துணிகளை எடுத்துக் கொடுத்துவிட்டு நீ உள்ள போ மாலினி நான் போன் பேசிட்டு வரேன் என்று சொல்லுகிறார். உடனே கல்யாணத்தை கூப்பிட்டு கூட எடுத்துட்டு போ என்று சூர்யா சொல்ல அவரும் எடுத்துக் கொண்டு உள்ளே வர மாதவி, சுரேகா, அசோகன், அருணாச்சலம் என அனைவரும் ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். கல்யாணம் புடவைகள் எடுத்துக் கொண்டு வந்து தீபாவளிக்கு ஐயா எல்லாருக்கும் துணி எடுத்துட்டாரா என்று சொல்ல மாதவியின் சுரேகாவும் ஆவலோடு புடவைகளை எடுத்துப் பார்க்க சூப்பரா இருக்கு நியூ கலெக்ஷனா இருக்கு இந்த புடவை எல்லாம் செமையா இருக்கு என்று சொல்லுகின்றனர். உடனே அசோகன் எல்லாம் புடவையா இருக்கு அப்ப எனக்கு எதுவும் இல்லையா மாமா என்று கேட்க இன்னொரு பார்சலில் வரும் என்று அருணாச்சலம் சொல்லுகிறார். உடனே பின்னாலே நந்தினி வந்து நிற்க புடவையை இவர்கள் பிரித்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உடனே சுரேகா சுந்தரவல்லி கூப்பிட்டு சூர்யா அண்ணா புடவை எடுத்துட்டு வந்திருக்கான் சூப்பரா இருக்கு என்று சொல்ல சுந்தரவல்லி இது மாதிரி எல்லாம் பண்ண மாட்டானே என்று சொல்லுகிறார் அக்கா தங்கச்சிக்கு வேணா எடுத்துக்கிட்டு வந்திருப்பான் ஆனால் எனக்கு எப்படி எடுத்துக்கிட்டு வந்து இருப்பான் என்று சொல்லி உட்காருகிறார். பிறகு சுரேகா ஒரு புடவையை எடுத்து சுந்தரவள்ளியின் மீது வைத்து இந்த புடவை உங்களுக்கு சூப்பரா இருக்குதும்மா இதய தீபாவளிக்கு கட்டிக்கோங்க என்று சொல்ல சுந்தரவள்ளியும் சிரிக்கிறார்.
பிறகு இதைப் பார்த்த சூர்யா வந்து நிற்க மாதவியும் சுரேகாவும் நாங்களே இன்னும் தீபாவளி பர்ச்சேஸ் பத்தி நினைக்கல அதுக்குள்ள நீ வாங்கிட்டு வந்துட்டியே என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம் இல்ல என்று சொல்ல உடனே மாதவி இது சர்ப்ரைஸ் அப்படித்தானே சூர்யா என்று சொல்ல அப்படித்தான் இதுக்கு மேல தான் உங்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொன்னவுடன் இந்த புடவை எல்லாம் உங்களுக்கு கிடையாது என்னோட டார்லிங் என்னோட தங்க குட்டிக்கு என்று சொன்னவுடன் சுந்தரவல்லி கையில் வைத்திருந்த புடவையை தூக்கி வீசுகிறார்.
மீண்டும் சுந்தரவல்லியை வெறுப்பேற்றும் படி அந்த புடவையை எடுத்துக் கொண்டு வந்து நந்தினியின் மீது வைத்து இந்த புடவை உனக்கு மட்டும்தான் சூப்பரா இருக்கும் செல்லம் பட்டு என்று கொஞ்சி இதெல்லாம் எடுத்துனு போய் மேல வச்சுக்கோ வேற யாருக்கும் கிடையாது உனக்கு மட்டும் தான் டார்லிங் என்று சொல்லுகிறார். இதனால் சுந்தரவல்லி டென்ஷன் ஆகி ரூம்மிற்கு சென்று கதவை சாத்தி விடுகிறார். உடனே மாதவி நந்தினி இடம் உனக்கு தான் முதலிலேயே உனக்கு மட்டும் தான் தெரியும் இல்ல நாங்க பிரிச்சு பார்க்கும்போதே அது எனக்கு வாங்குனதுன்னு சொல்லி இருக்க வேண்டியதுதானே இப்படி நாங்க அசிங்கம் பண்ணனும் தானே பண்ண என்று சொல்ல எனக்கு பயமா இருந்துச்சு சொல்றதுக்கு அதனால தான் நான் சொல்லல என்று நந்தினி சொல்லுகிறார். ஆமா உனக்கு ரொம்ப பயம் தான் என்று மாதவி சொல்லிவிட்டு சுந்தரவல்லி இடம் மூவரும் செல்கின்றனர்.
கோபத்தில் சுந்தரவல்லி சுரேகாவை என் எதிரில் நிக்காத அரஞ்சிடப் போற போயிடு என்று திட்ட உடனே மாதவி அம்மா அம்மா கொஞ்சம் பொறுமையா இருங்கம்மா எங்களுக்கே தெரியாது தெரிஞ்சா நான் உங்களுக்கு கூப்பிட்டு இருப்போமா என்று சொல்ல தெரியாம எதுக்கு என்னை கூப்பிட்டு அலப்பறை பண்ணிக்கிட்டு இருந்த என்று சுந்தரவல்லி கோபமாக சொல்லுகிறார். ஒரு வேலைக்காரி கட்ட போற சேலையை என் மேல வச்சு என் உடம்பு கூசுது. ஏற்கனவே அவை இந்த வீட்ல இருக்கிறது என் உடம்பெல்லாம் எரியுது இப்போ இது வேறயா என்ன அசிங்கப்படுத்திக்கிட்டு இருக்கீங்களா என்று சொல்ல கொஞ்ச நேரம் பொறுமையா இருங்கம்மா என்று மாதவி சொல்ல உடனே சுரேகா ஆமாம்மா அந்த சாரி எல்லாம் அவளை கட்டவே விடக்கூடாது என்று சொன்னவுடன் சுந்தரவல்லி இன்னும் கடுப்பாகிறார். எங்கிருந்து வந்தீங்க நீங்க எல்லாம் அவளை வீட்டை விட்டு துரத்த சொன்னா புடவை கட்டக்கூடாது ஜாக்கெட் போடக்கூடாதுன்னு பேசிகிட்டு இருக்க என்று இன்னும் டென்ஷன் ஆகிறார் பிறகு மாதவி நான் பார்த்துக்கிறேன் நீங்க விடுங்க என்று சொல்லி வெளியே வருகிறார்.
பிறகு ரூமில் சூர்யா படுத்து கொண்டிருக்க வாங்கிட்டு வந்த துணியை எங்கே வைப்பது என்று தெரியாமல் நந்தினி யோசித்துக் கொண்டிருக்கிறார் பிறகு சூர்யா நீ என்னோட வா கபோர்டுல வச்சுக்கோ என்று சொல்ல அங்கு இருந்த துணிகளை அட்ஜெஸ்ட் செய்து விட்டு நந்தினி புடவையை அடுக்கி வைக்கிறார்.உடனே நந்தினி நீங்க கடைக்கு வர சொன்னிங்க வந்த ,புடவை வாங்கிட்டு சொன்னீங்க வாங்கிகிட்ட, இங்க வச்சு அடுக்க சொன்னீங்க அடுக்கிட்டேன். ஆனா இதெல்லாம் நான் கட்ட மாட்டேன் என்று சொல்லுகிறார் ஏன் உனக்கு இதெல்லாம் பிடிக்கலையா என்று கேட்க நான் அதிகமான வேலையில் புடவை கட்ட மாட்டேன் என்று சொல்லுகிறார் இனிமே கட்ட பழகிக்கோ என்று சூர்யா சொல்ல நந்தினி அமைதியாக நிற்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
