துல்கர் சல்மானின் “ஐயம் கேம்” படத்தின் டிரெய்லர் வெளியானது

Web Ads

மலையாள திரையுலகின் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள ‘I’m Game’ திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த மெகா பட்ஜெட் ஃபேன்டஸி ஆக்‌ஷன் த்ரில்லரை, நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய படைப்பாக உருவாகியுள்ளது.

சஜிர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர் மற்றும் பிலால் மொய்து திரைக்கதை எழுதியுள்ள நிலையில், வசனங்களை சஜிர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷபாஸ் ரஷீத் எழுதியுள்ளனர்.

வெளியான டிரெய்லர் தொடக்கம் முதல் இறுதி வரை ரசிகர்களை பரபரப்பாக ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், ஸ்டைலிஷ் ஆக்‌ஷன், அதிவேக சேஸ் காட்சிகள் மற்றும் மாஸ் தருணங்கள் டிரெய்லரின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக, இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான தோற்றத்தில் துல்கர் சல்மான் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

100-க்கும் மேற்பட்ட தென்னிந்திய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், மலையாள சினிமாவின் மிகப்பெரிய பான்-இந்தியா வெளியீடுகளில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

Web Ad 2

ஜீ மியூசிக் நிறுவனம் இசை உரிமையை கைப்பற்றியுள்ள நிலையில், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் வழங்கியுள்ள பின்னணி இசை டிரெய்லருக்கு கூடுதல் வலுசேர்த்துள்ளது. ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவும், அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

‘லோகா’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films தயாரிக்கும் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள ‘I’m Game’, துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், ‘RDX’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது.

‘I’m Game’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக ஆகஸ்ட் 20 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.