‘வதந்தி சீசன் 2’யிலிருந்து துள்ளலான ‘தெய்வா’ பாடல் வெளியீடு

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டுள்ளன. துள்ளலான இசை, உற்சாகமான தாளங்கள் மற்றும் வண்ணமயமான காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்தப் பாடல், சீரிஸின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இசையமைப்பாளர் சைமன் K. கிங் இசையமைத்து தயாரித்துள்ள இந்தப் பாடலை, சைமன் மற்றும் யஷ்வந்த் இணைந்து பாடியுள்ளனர். மணி ரோமியோ எழுதியுள்ள வரிகள், உற்சாகமான இசையுடன் இணைந்து ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.
‘தெய்வா’ பாடலின் மியூசிக் வீடியோவில் உற்சாகமான நடனக் காட்சிகள், கலகலப்பான தருணங்கள் மற்றும் நடிகர்களின் ஆற்றல்மிக்க நடிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், பாடல் உருவான விதத்தை காட்டும் பின்னணிக் காட்சிகள் (Behind the Scenes) மற்றும் படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் பகிர்ந்த மகிழ்ச்சியான தருணங்களும் இடம்பெற்றுள்ளன.
மதுரையின் கலாச்சாரப் பின்னணி மற்றும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’, புதிரும் பரபரப்பும் நிறைந்த புதிய குற்றப் பின்னணிக் கதையை சொல்லுகிறது.

இந்த சீரிஸில், நேர்மையான காவல் அதிகாரி எஸ்.ஐ. மூசா ரஸாவாக எம். சசிகுமார் நடித்துள்ளார். நெடுஞ்சாலைத் திட்ட தொடக்க விழாவின் போது கண்டெடுக்கப்படும் மனித எலும்புக்கூட்டைச் சுற்றிய மர்மத்தை விசாரிக்கும் அவர், வதந்திகள், ஏமாற்றங்கள் மற்றும் புதைக்கப்பட்ட ரகசியங்கள் நிறைந்த சிக்கலான வலையில் சிக்கிக் கொள்வதே கதையின் மையமாக அமைந்துள்ளது.
ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ளனர். இதில் யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸ், ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் தமிழில் பிரத்யேகமாக வெளியாகிறது. மேலும் தெலுங்கு, இந்தி டப்பிங் பதிப்புகளுடன், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையில், ‘தெய்வா’ பாடல் தற்போது அனைத்து முக்கிய இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கேட்டு ரசிக்கக் கிடைக்கிறது.