சிக்​னலில் நடக்​கும் பிரச்சினையை சொல்​லும் ‘சிக்னல் அட் 11.30’

Web Ads

‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் தலைப்பும், முதல் பார்வை போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த ரொமான்டிக் த்ரில்லரில், சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார்.

காதல், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக, ‘சிக்னல் அட் 11.30’ என்ற தலைப்பின் பின்னணியில் உள்ள அர்த்தத்தை படக்குழு இதுவரை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளது. அந்த சஸ்பென்ஸ் திரையரங்கில் மட்டுமே ரசிகர்களுக்கு தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து எழுத்தாளர் – இயக்குநர் மலர்விழி நடேசன் கூறுகையில், “படத்தின் தலைப்பு கதையின் மையக் கருவுடன் நேரடியாக தொடர்புடையது. அதன் அர்த்தத்தை இப்போது கூறினால், படத்தின் முக்கிய ஆச்சரியங்களில் ஒன்று முன்கூட்டியே தெரிந்துவிடும். ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கதையில், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்த நோக்கம் உள்ளது. காதல், உணர்வுகள், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ரொமான்டிக் த்ரில்லராக ‘சிக்னல் அட் 11.30’ உருவாகியுள்ளது” என்றார்.

Web Ad 2

மேலும், நடிகர்கள் தேர்வு குறித்து அவர் பேசுகையில், “திரைக்கதை எழுதும்போதே கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கான உணர்வுப்பூர்வமான ஆழத்தையும் திரை ஆளுமையையும் மனதில் வைத்திருந்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு சந்தோஷ் பிரதாப் மிகவும் பொருத்தமானவர். அவரது அர்ப்பணிப்பான நடிப்பு கதாபாத்திரத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் ஒவ்வொரு திருப்பமும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

மர்மம் நிறைந்த கதைக்களம், உணர்வுப்பூர்வமான திரைக்கதை மற்றும் இறுதிவரை யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்ரமணி தயாரிக்கும் இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவும், ஆர். கலைவாணன் படத்தொகுப்பும் செய்துள்ளார். நடன அமைப்பை ஷெரீஃப் கவனித்துள்ளார்.