சந்தீப் பிரதாப் நடிக்கும் “பிக்னிக்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Web Ads

பாவனா ஸ்டுடியோஸின் அடுத்த படைப்பாக உருவாகும் ‘பிக்னிக்’ (Picnic) திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிரேமலு’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ உள்ளிட்ட படங்களில் இணை எழுத்தாளராகப் பணியாற்றிய கிரண் ஜோசி, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சந்தீப் பிரதீப், இந்திரஜித் சுகுமாரன், திலீஷ் போத்தன், சுஜினா ஸ்ரீதரன் மற்றும் அக்ஷதா அஜித் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

குடும்ப நகைச்சுவை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், 2027 ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Web Ad 2

மேலும், ‘பிக்னிக்’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. தெலுங்கு மாநிலங்களில் இப்படத்தின் வெளியீட்டு பணிகளை Future Runup Films நிறுவனம் மேற்கொள்கிறது.