”ஒன்றா ரெண்டா” திரைத்துறையில் 25 ஆண்டு கால பயணத்தை கொண்டாடும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, அவரது திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, தற்போது இந்த இசைக் கொண்டாட்டம் மலேசியாவின் கோலாலம்பூருக்கு பயணிக்கிறது.
‘ஒன்றா ரெண்டா – 25 Years of GVM’ எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி வரும் அக்டோபர் 10, 2026 அன்று கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களுடன் இணைந்த மறக்க முடியாத பாடல்கள், கதைகள் மற்றும் நினைவுகளை ஒரே மேடையில் கொண்டுவரும் வகையில் இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.
GVM-ன் திரைப்படங்களில் இடம்பெற்ற மெலடிகள் முதல் ரசிகர்களைக் கவர்ந்த ஹிட் பாடல்கள் வரை, பல்வேறு பாடல்கள் நேரடி இசை நிகழ்ச்சியாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட உள்ளன.
கோலாலம்பூர் நிகழ்ச்சியில் கார்த்திக், ஸ்ருதி ஹாசன், கிரிஷ், பிளாஸ், சைந்தவி, பால் டப்பா, சத்ய பிரகாஷ் மற்றும் ஹரிப்ரியா உள்ளிட்ட முன்னணி பாடகர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும், இசைக்கலைஞர்களான கேபா ஜெரமையா, லலித் தல்லூரி, மனோஜ் குமார், கீத் பீட்டர்ஸ் மற்றும் புவனேஷ் நாராயணன் ஆகியோரும் இணைந்து நேரடி இசை நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ரசிகர்களுக்கு சிறப்பான இசை அனுபவத்தை வழங்கிய நிலையில், அதே உற்சாகத்துடனும் பிரம்மாண்டத்துடனும் கோலாலம்பூர் நிகழ்ச்சியை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
My Events International நிறுவனத்துடன் இணைந்து ராடான் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது. ‘ஒரு ஊரிலே ஒரு ஃபிலிம் ஹவுஸ்’ மற்றும் ப்ரீதி ஸ்ரீவிஜயன் ஆகியோர் நிகழ்ச்சியின் கான்செப்ட் மற்றும் படைப்பாக்கத்தை உருவாக்கியுள்ளனர். பீட்ரூட் நிறுவனம் படைப்பு விளம்பரப் பணிகளில் இணைந்துள்ளது.
இசை, சினிமா மற்றும் ரசிகர்களின் மறக்க முடியாத நினைவுகளை ஒரே மேடையில் இணைக்கும் ‘ஒன்றா ரெண்டா – 25 Years of GVM’, அக்டோபர் 10 அன்று கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.
