பிக்பாஸ் டாஸ்க்கில் அதிர்ச்சி.. லட்சுமி பிரியா தள்ளியதில் மயக்கமடைந்த ஆனந்தி!

Web Ads

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்று வரும் டாஸ்க் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. டாஸ்க்கின் போது போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில், லட்சுமி பிரியா தள்ளியதில் ஆனந்தி காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வலியில் அழுத ஆனந்திக்கு, சக போட்டியாளர்கள் உடனடியாக உதவினர். அவரை தாங்கிப் பிடித்தபடி டாஸ்க் நடைபெறும் இடத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

Web Ad 2

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியை தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். JioHotstar தளத்தில் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும், பிக் பாஸ் வீட்டின் 24×7 நேரலை ஒளிபரப்பையும் JioHotstar-ல் காணலாம்.