துல்கர் சல்மானின் ஸ்ரீ ஸ்ரீ முதல் பாடல் வெளியீடு!

Web Ads

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே கெமிஸ்ட்ரியில் வெளியாகிய ‘வானே வானே’ பாடல்!

நடிகர் துல்கர் சல்மான் தனது 41வது திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் நடித்து வருகிறார். எஸ்.எல்.வி. சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இப்படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இருவரும் முதன்முறையாக இணையும் இப்படம் காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளைக் கலந்து உருவாகி வருகிறது.

ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படப்பிடிப்பு தள காட்சிகள் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில், தற்போது ‘வானே வானே’ என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் படத்தின் இசைப் பயணமும் தொடங்கியுள்ளது.

ரயில் நிலையத்தில் தொடங்கும் இப்பாடலில், நடைமேடைக்கு வரும் பூஜா ஹெக்டேவை பார்த்ததும் துல்கர் சல்மான் மெய்மறந்து போகும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து பயணிக்கும் அழகான தருணங்கள் மற்றும் மகிழ்ச்சியான காட்சிகள் ரசிக்கும்படியான மாண்டேஜாக அமைந்துள்ளன.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள ‘வானே வானே’ பாடல், இனிமையான மெலடி மற்றும் நேர்த்தியான இசைக்கோர்வையால் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. பாடலாசிரியர் கே.ஆர். தரன், காதலில் விழுந்த ஆண் ஒருவரின் உணர்வுகளை கவித்துவமாக பதிவு செய்துள்ளார். நகுல் அபயங்கர் தனது இனிமையான குரல் மற்றும் உணர்வுப்பூர்வமான பாடலால் பாடலுக்கு கூடுதல் அழகு சேர்த்துள்ளார்.

Web Ad 2

ராம் மாஸ்டர் அமைத்துள்ள நடனமும் பாடலின் காட்சிகளுக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. அதேபோல், துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே இருவருக்கும் இடையேயான இயல்பான கெமிஸ்ட்ரி பாடலின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது. இருவரின் தோற்றம், நடிப்பு மற்றும் திரையில் வெளிப்படும் புரிதல் ஆகியவை பாடலை ரசிக்க வைக்கின்றன.

அழகிய லொகேஷன்கள், மனதை வருடும் மெலடி, கவர்ச்சியான காட்சியமைப்பு மற்றும் ரசிக்க வைக்கும் நடிப்பு என அனைத்து அம்சங்களும் ஒன்றிணைந்துள்ளதால், ‘வானே வானே’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.