Pushpa 2

மீனாவைப் பெண் கேட்ட நபர், சிக்கித் தவிக்கும் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மீனாவை பெண் கேட்டு வந்ததால் முத்து சிக்கித் தவித்துள்ளார்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சொன்ன நபர் நேராக வீட்டிற்கு வந்து அண்ணாமலை இடம் பேசுகிறார். உங்க பொண்ண நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைபடுறேன் என்று சொல்ல அண்ணாமலை ஒன்றும் தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.. நீ வீடு மாறி வந்துட்டான்னு நினைக்கிறேன்பா என்று சொல்ல அப்படி எல்லாம் கிடையாது.வர வேண்டிய இடத்துக்கு கரெக்ட்டா தான் வந்து இருக்கேன் என்று சொல்லி மீனா அந்த பக்கம் வேலை பார்த்துக் கொண்டிருக்க அந்த பொண்ணு தான் கேட்க வந்த என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் நீ சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியலப்பா என்று பேசிக்கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து முத்து வந்துவிடுகிறார் இங்கே நீ என்ன பண்ற டா என்று கேட்க இது உங்க வீடான என்று சொல்லி பேசிக்கொண்டு இருக்க உடனே மீனா வருகிறார் நீ எங்கடா இங்க வந்த இன்று மீனா கேட்க உனக்கு தெரியுமா மீனா என்று முத்து கேட்கிறார் இவன் தாங்க எனக்கு அன்பு எல்லாம் பேரு வச்சு பின்னாடியே வரான்னு சொன்னனே இவன்தான் என்று சொல்லுகிறார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 07-12-24
SiragadikkaAasai Serial Today Episode Update 07-12-24

உடனே அந்த நபர் எல்லாத்துக்கும் காரணம் முத்து அண்ணன் தான் அவர்தான் இப்படி எல்லாம் சொல்லிக் கொடுத்தார் என்று சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர் முத்து மீனாவை பார்த்து முறைக்கிறார். அண்ணாமலை இடம் சென்று நீங்க உங்க பொண்ண குடுக்கணும் என்று கேட்க இதுல முடிவெடுக்கிற உரிமை என்னைய விட அவனுக்கு தான் அதிகமா இருக்கு என்று சொல்ல நீங்க இந்த வீடுன்னா அப்ப உங்களோட அப்பனா நீங்க எனக்கு மச்சான் என்று கண்டுபிடித்துக் கொள்கிறார். உடனே முத்து அவ என் பொண்டாட்டி டா என்று சொல்ல காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி விடுகிறார்.

மறுபக்கம் ஸ்ருதி நம்ப அன்னைக்கு போட்டோ எடுத்து சோசியல் மீடியால போட்டதிலிருந்து மீனாவுக்கு நிறைய ஹார்ட் கமெண்ட் லவ் ப்ரொபோஸ் எல்லாம் வந்திருக்கு என்று சொல்ல முத்து அப்படியா என்று கேட்கிறார். என்னென்ன கமெண்ட் வந்திருக்கிறது என்பதை சுருதியும் மீனாவும் படித்துக் கொண்டிருக்க உடனே விஜயா வந்துவிடுகிறார். பேசமாட்டேன்னு சொன்னீங்க இப்ப கொஞ்சம் குழா விட்டு இருக்கீங்க என்று கேட்க நீங்க கோவிச்சுக்கிட்டு பார்வதி ஆன்ட்டி வீட்டுக்கு போனா அப்பவே நாங்க பிரெண்ட்ஸ் ஆயிட்டோம் அவங்கள மன்னிச்சுட்டேன் என்று சொல்லுகிறார். எப்படியோ போங்கன்னு சொல்லிவிட்டு விஜயா சென்று விட, ஸ்ருதி மீனா இருவரும் உள்ளே சென்று விடுகின்றனர். பிறகு மொட்டை மாடியில் முத்துவை உட்கார வைத்துவிட்டு லவ் பண்றதுக்கு ஹெல்ப் பண்றதுக்கு தப்பு கிடையாது ஆனா யாரெல்லாம் லவ் பண்றாங்கன்றது தெரிஞ்சுக்கிட்டு தானே ஹெல்ப் பண்ணனும் என்று திட்டுகிறார்.

உடனே முத்து அவன் சொன்னதெல்லாம் வச்சு பார்த்தா காலேஜ் பொண்ணு மாதிரி சொன்னா ஆனா உன்ன சொல்லி இருப்பேன் எனக்கு எப்படி தெரியும் என்று சொல்ல உடனே மீனா வெட்கப்பட்டு நான் காலேஜ் பொண்ணு மாதிரி இருக்கேன் நான் என்று சொல்லுகிறார் உடனே முத்து மீனாவை சுற்றி பார்த்துவிட்டு தலையாட்டுகிறார். ஸ்ருதி போட்ட போட்டோக்கு கீழ நிறைய பேர் இப்படித்தான் போட்டு இருக்காங்க என்று சொல்ல நானும் அது மாதிரி போட்டோ போட்டு இருந்தா எனக்கும் ஏதாவது ஒரு பொண்ணு செட் ஆயிருக்கும் என்று சொல்ல மீனா கோபப்பட்டு முத்துவை துரத்தி ஓடுகிறார் வீட்டுக்குள் இருவரும் விளையாடிக் கொண்டிருக்கிற விஜயா வந்து நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் விளையாடிகிட்டு இருக்கீங்க என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் ரோகிணி வீட்டுக்கு வந்து எல்லோரையும் கூப்பிட்டு ஸ்வீட் கொடுக்கின்றனர்.

அவர்கள் ஸ்வீட் கொடுக்க என்ன காரணம்? வீட்டில் இருப்பவர்களின் ரியாக்ஷன் என்ன?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 07-12-24
SiragadikkaAasai Serial Today Episode Update 07-12-24