தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாதிப்புகள் குறித்து ரஜினிகாந்த்!
‘கூலி’ படப்பிடிப்புக்காக தாய்லாந்து செல்லும் முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாய்ஸ் கேட்போம்..
ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ‘கூலி’ படத்துக்காக, தற்போது தாய்லாந்தில் சில காட்சிகளை படமாக்க கிளம்பிச் சென்றிருக்கிறார்.
‘கூலி’ படப்பிடிப்பு விரைவில் இறுதிக்கட்டத்தை நெருங்கப் போவதாகவும், படம் தொடர்பான கேள்விக்கு ரஜினி பதிலளித்தார். ‘தமிழ்நாட்டில் பெண்கள் பாதிக்கப்படுவது’ குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
‘தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறதே’ என்கிற கேள்வியை செய்தியாளர் கேட்டபோது, “அரசியல் தொடர்பான கேள்வியை கேட்கக்கூடாதுன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன்” என விரலை நீட்டி சிரித்துக்கொண்டே அந்த நிருபரை அமைதியடை செய்துவிட்டு, அங்கே இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்
தாய்லாந்தில், வருகிற13-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும்; இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் ‘கூலி’ படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், அரசியல் தொடர்பான கேள்விகளை தவிர்த்து விட்டார்.
முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, அர்ஜுன், நடித்து வெளியான ‘லியோ’ படம் 1000 கோடி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் 600 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில், கோலிவுட்டின் முதல் 1000 கோடி வசூல் படமாக ‘கூலி’ இருக்கும் என குறி வைக்கப்படுகிறது. இரை விழும் என எதிர்பார்ப்போம்.!