என்னைப் போல ரசிகர்களும் பைத்தியமாவார்கள்: எஸ்.ஜே.சூர்யா ருசிகர பேச்சு..
இயக்குனர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா ஸ்பீச் என்னன்னா..
அதாவது, நடிகர் ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, பிரம்மானந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படம் வருகிற 10-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில், இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டுள்ளன. தமன் இசையில் படத்தின் பாடல்கள் லிரிக் வீடியோக்களாக வெளியாகி பெரிய வரவேற்பையும் சில விமர்சனங்களையும் பெற்றுள்ளன.
இதனிடையே, எஸ்.ஜே. சூர்யா படத்தில் வில்லனாக- அரசியல்வாதியாக நடித்துள்ளார். ராம்சரணுக்கு எதிரான இவரது ஆக்ரோஷம் படத்தின் டிரெய்லரில் தெறிக்கிறது. இந்தப் படத்தின் வெற்றிக்கு இவர் முக்கியமான காரணமாக அமைவார் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ‘கேம் சேஞ்சர்’ படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா,
‘படத்திற்காக தயாரிப்புத் தரப்பு 500 கோடி அளவில் செலவிட்டு உள்ளது. அதற்கான வட்டியை கணக்கிட்டால், எங்கேயோ போகும். அதனால, தயாரிப்பாளர் தில் ராஜுக்கு, ஷங்கர் மீது மிகப்பெரிய பிரியம் உள்ளதால அவரது பிரம்மாண்டத்திற்கு சிறப்பான சப்போர்ட் செய்துள்ளார்.
இந்தப் படத்தின் ‘ஜருகண்டி’ பாடலை முன்னதாகவே லிரிக் வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அந்தப் பாடல், வலைதளங்களில் லீக்கானதால் வெளியிடப்பட்டது. தற்போதுதான் அந்தப் பாடலை பார்த்தேன். ரசிகர்கள் கொடுக்கும் காசு, அந்தப் பாடலுக்கே சரியாகி போகும்.
ஆமா.. பிரபுதேவா மாஸ்டரின் கொரியோகிராபியும் அந்த பாடலுக்கு அழகை சேர்த்துள்ளது. ‘ஹான்ட்சம்’ என்ற வார்த்தைக்கு இந்தப் பாடலில் ராம்சரணும் ‘பியூட்டிஃபுல்’ என்ற வார்த்தைக்கு கியாராவும் அர்த்தம் தந்துள்ளனர்’.
தங்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்திற்கு, இந்தப் பாடலிலேயே அவர்கள் இருவரும் தங்களது திறனை கொடுத்து விட்டனர். இந்தப் பாடலை பார்த்துவிட்டு நான் பைத்தியமாகி விட்டேன். பார்க்கும் ரசிகர்களும் பைத்தியமாவார்கள். இது மட்டுமில்லாமல், மொத்த படமும் ரசிகர்களுக்கு போனசாக அமையும்’ என பொங்கல் விருந்தாக பேசினார்.