`ஜோ’ பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி வி பிரகாஷ்

Web Ads

இசையமைப்பாளரும் நடிகருமான G. V. Prakash Kumar, ‘ஜோ’ திரைப்படத்தின் இயக்குநர் Hariharan Ram உடன் புதிய படத்தில் கைகோர்த்துள்ளார். லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கருடன்’, ‘மாமன்’ போன்ற படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

‘ஜோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹரிஹரன் ராம் இயக்கும் இந்த புதிய படத்தில், ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பதுடன் இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இணைந்துள்ளார். இதுவரை அவர் நடித்த படங்களிலிருந்து மாறுபட்டு, வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக அவர் சிறப்பு பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

Web Ad 2

‘ஜோ’ படத்தின் மூலம் கவனம் பெற்ற Malavika Manoj, இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஒளிப்பதிவை Theni Eswar மேற்கொள்ளவுள்ளார். ‘கர்ணன்’, ‘வாழை’ உள்ளிட்ட படங்களில் தனது ஒளிப்பதிவால் பாராட்டுகளை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. படப்பிடிப்பு நடைபெறும் இடங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.