Pushpa 2

நந்தினி சொன்ன வார்த்தை,கோபத்தில் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக் களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 08-01-25
Moondru Mudichu Serial Today Promo Update 08-01-25

நேற்றைய எபிசோடில் சூர்யா இது மாதிரி ஒரு கேவலமா ஒரு விஷயம் பண்றீங்கள அது ரொம்ப அசிங்கமா இருக்கு. வீட்ல இருக்குறவங்கள விட வேற யாரும் எடுக்க வாய்ப்பே இல்லை. கண்டிப்பா நம்ம வீட்ல இருக்கிறவங்கதான் எடுத்திருக்கணும் அது திருடனா திருடியான்னு தெரியாது உங்களுக்கு பத்து நிமிஷம் டைம் தர நகை எடுத்தவங்க திருப்பி கொடுத்துடனும் இல்லனா உடனே போலீஸ் வரும் ஒரு ஒரு ரூம் செக் பண்ணி யார் கிட்ட நக இருக்கோ அவங்க வசமா மாட்டுவீங்க.

அப்போ சென்டிமென்ட் பாக்கவே மாட்டேன் அவங்கள புடிச்சு உள்ள தள்ளிடுவேன் என்று சொல்லி வார்னிங் கொடுக்கிற. எனக்கு நகை இங்க வந்தே ஆகணும் என்று சொல்லுகிறார். பிறகு சுந்தரவல்லி மாதவியிடம் உங்கப்பா எடுத்துக் கொடுத்த தாலி செயின் மட்டும் எடுத்துக் கொண்டு வந்து கொடு, செயின் இல்லனா எப்படி நடக்கும். இது ஒன்னு எல்லாமே சாங்கியம் பார்த்து நடந்த கல்யாணம் கிடையாது. சூர்யாவிற்கு என்ன நல்லது பண்ணனும்னு எனக்கு தெரியும் அத பத்தி நீ கவலைப்படாதே என்று சொல்ல, அதனால் பிரச்சனை வந்தா என்ன பண்றது என்ற மாதவி கேட்க என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் சொன்னத மட்டும் செய்ங்க என்று சொல்லி அனுப்ப, அவர்களும் தாலிச் செயின் எடுத்துக்கொண்டு சுந்தரவல்லியிடம் கொடுத்து விடுகின்றனர்.இத பத்தி யார்கிட்டயும் சொல்லக்கூடாது என்று சொல்லி அனுப்பி விட்டு அந்த நகையை கப்போர்ட்டில் வைத்து கதவை சாத்தியதை நினைத்துப் பார்க்கிறார் சுந்தரவல்லி.

சூர்யாவிடம் வந்து விஜி இப்படி எல்லாம் கூட பண்ணுவாங்களா அண்ணா என்று கேட்க நான் என் குடும்பத்தை பத்தி சொல்லும் போது நீ என்ன தான திட்டவீங்க இது மாதிரி ஒரு ஃபேமிலியை பார்த்திருக்கவே மாட்டீங்க ரொம்ப வொர்ஸ்ட் என்று சொல்லுகிறார். நந்தினி பாவம் அவகிட்ட போய் ரெண்டு வார்த்தை பேசுங்க என்று சொல்ல, சூர்யாவும், விஜியும் நந்தினியிடம் பேச இத முன்னாடியே சொல்லி இருந்தா நம்ம வேற எங்கயாவது பண்ணி இருக்கலாம் என்று சொல்ல இதெல்லாம் எனக்கே தெரியாது எல்லாமே ஐயாவோட ஐடியா தான் என்று நந்தினி சொல்லுகிறார். இதுக்குள்ள என்ன சூழ்ச்சி இருக்குன்னு எனக்கு தெரியல என்று சொல்ல, சூர்யா இதுக்கு நீ என்ன பண்ண முடியும் அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் என்று சூர்யா சொல்ல, உடனே அசோகனை மிரட்டி கேட்கும் படி என்ன வட்டமேசை மாநாடு போட்டுக்கிட்டு இருக்கீங்களா? போலீஸ் வந்து கண்டுபிடிச்சாங்கன்னா யாரா இருந்தாலும் உள்ள போக வேண்டியது இருக்கும் என்றும் மிரட்ட, மாதவி, சுரேகா மற்றும் அசோகன் என மூவரும் போலீஸ் வந்துரும்னு சொல்றான் நம்ம செயினை குடுத்து விடலாம் என்று சொல்ல போலீசில் மிலிட்டரியே வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்ல மூவரும் கிளம்பி சென்று விடுகின்றனர்.

உடனே போலீஸ் வர சூர்யா அவரை வரவேற்க உங்க வீட்ல என்னதான் சார் பிரச்சனை எப்ப பாத்தாலும் கம்ப்ளைன்ட் வந்துகிட்டே இருக்கு என்று சொல்லுகிறார். வீட்டில் வாங்கி வச்ச நகையை காணோம் வீட்ல இருக்கிற யாரும் எடுத்து இருக்காங்க நாங்க சாதாரணமா கேட்டா தர மாட்டாங்க, உங்க டிசைன்ல கேட்டு வாங்கி கொடுங்க என்று சொல்ல உங்க வீட்ல மட்டும் தான் இந்த மாதிரி டிசைன் டிசைனா பிரச்சனை வருது என்று சொல்லி போலீஸ் உள்ளே வருகிறார். பிறகு போலீஸ் வந்து இங்கே என்ன நடக்குது என்ன விஷயம் என்று கேட்க அருணாச்சலம் இங்க எங்க வீட்டு மருமகளோட தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடக்குது தாலி செயினை தான் காணோம் என்று சொல்ல சூர்யா முதலில் என்னோட அக்காவோட ரூம்ல போய் தேடுங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு போலீஸ் அனைவரும் அனைத்து ரூம்களிலும் தேடிப் பார்த்துவிட்டு இல்லை என்று சொல்ல முக்கியமான ரூம்ல தேடாமல் விட்டுட்டீங்க என்று சொல்ல அருணாச்சலம் என்னோட ரூம்ல எப்படி இருக்கும் என்று கேட்க அது உங்களோட ரூமா இருந்தா நான் தேடி இருக்க மாட்டேன். இது எல்லாரோட ரூம்லயும் தேடி தானே பார்த்தாங்க இந்த ஒரு ரூம மொத்தம் எப்படி தேடாமல் இருக்க முடியும் என்று கேட்ட சுந்தரவல்லி எடுக்கலன்னு சொல்லிட்டா என்று சொல்ல இருந்தாலும் சூர்யா தேடிப்பார்க்கலாம் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

போலீஸ் கதவை திறக்க போக சுந்தரவல்லி என் ரூம்ல யாரும் போகக்கூடாது என்று தடுக்கிறார். உடனே சூர்யா அப்போ கன்ஃபார்ம் நீங்க உள்ள போங்க என்ற போலீசை சொல்ல, போலீஸ் அஞ்சு நிமிஷம் மேடம் போய் செக் பண்ணிட்டு வந்துடறேன் என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி இவ என்ன வேணா பண்ணிக்கிட்டு இருப்பான் அதெல்லாம் பாத்துக்கிட்டு இருக்கணுமா என்று சொல்ல சூர்யா கதவை எட்டி உதைத்து திறக்கிறார். உடனே நந்தினி தாலி செயின் என் கையில தான் இருக்கு நான் தான் எடுத்து வச்சேன் இந்த தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனில் எனக்கு விருப்பமில்லை அதனால் தான் மறைத்து வைத்தேன் போலீஸ் வந்ததுனால பெரிய பிரச்சினையாகிடுச்சு அதனால கொடுத்துட்டேன் என்று சொல்லுகிறார். உடனே போலீஸ் கிளம்பி விடுகின்றனர்.

என்ன நந்தினி இதெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவ்வளவு நொந்து பேசின இப்போ, இது மாதிரி ஒளிச்சு வச்சு எல்லாரையும் சங்கடப்படுத்தி நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைக்கல என்று விஜி வருத்தப்படுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் என்னதான் அவங்க திட்டி இருந்தாலும் உங்க குடும்பத்து மேல எனக்கு ஒரு நன்றி உணர்ச்சி இருக்கு என்று அருணாச்சலத்திடம் நந்தினி சொல்ல, மாதவியும் சுரேகாவும் கேட்கின்றனர்.

ஒவ்வொரு விஷயத்திலும் அவ என்ன ஜெயிச்சுக்கிட்டே இருக்கா அத நான் வேடிக்கை பார்க்கணுமா என்று சுந்தரவல்லி கோபப்படுகிறார். நந்தினி விஜியிடம் சுந்தரவல்லி அம்மா எவ்வளவு ஆத்திரத்தோட இருப்பாங்கன்னு ஒரு நிமிஷம் யோசிச்சு பாருங்க அது எல்லாமே என் மேல தான் திரும்பும் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 08-01-25
Moondru Mudichu Serial Today Promo Update 08-01-25