ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் நடிக்கும் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Web Ads

‘96’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ஆதித்யா பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் அண்ட் வார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சரஸ் மேனன், ஜீவா ரவி, டி. எஸ். ஆர், நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆர்ஜின் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் கண்ணா பாஸ்கர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு எல். ராமச்சந்திரன், இசையமைப்பு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட், படத்தொகுப்பு பரத் விக்ரமன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

Web Ad 2

இப்படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில், ஈகோவும் கோபமும் காரணமாக உறவுகள் சிக்கலாகும் சூழ்நிலையை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘லவ் அண்ட் வார்’ உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஆதித்யா பாஸ்கர் – கௌரி கிஷன் ஜோடி திரையில் சிறப்பான கெமிஸ்ட்ரியுடன் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் நடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.