Pushpa 2

பாலிவுட்டில் அமீர்கான் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயன்: இயக்குனர் யார்?

பாலிவுட்டில் நுழைய விரும்பும் சிவகார்த்திகேயனுக்கு “நல்ல கதை” தற்போது தேவை. இது குறித்த விவரம் பார்ப்போம்.

அமீர்கான் தயாரிப்பில் இந்திப் படமொன்றில் நடிக்க இருப்பதை சிவகார்த்திகேயன் உறுதி செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர்,

அமீர்கான் உடனான சந்திப்புக்கு காரணம், ஒரு இந்திப் படம் பண்ணலாம் என பேசினேன். அந்தப் பேச்சுவார்த்தை எதிர்பார்த்த வகையில் முடியவில்லை. ஆனால், இந்திப் படம் பண்ண ஆர்வமாக இருக்கிறேன்.

அமீர்கானை சில முறை சந்தித்தேன். “உங்களுடைய முதல் இந்திப் படம் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருக்க வேண்டும். உங்களிடம் ஏதேனும் கதைகள் இருந்தால்கூட கொடுங்கள்” என கூறியிருக்கிறார்.

“இங்கு சில பணிகள் இருக்கிறது, அதை முடித்துவிட்டு சரியான கதை வரும்போது எடுத்து வருகிறேன்” என அமீர்கானிடம் கூறியிருக்கிறேன். என் முதல் படம் அவருடைய தயாரிப்பில் இருக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார். ஆகையால், அது எப்போது வேண்டுமானாலும் நடக்கும். அதை கதை தான் தீர்வு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம், சுதா கொங்கரா இயக்கி வரும் படம் ஆகியவற்றில் பணிபுரிந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ‘டான்’ இயக்குனர் சிபி படமும் உள்ளது.

இவ்வகையில், தமிழும் ஹிந்தியும் தெரிந்த செம ஸ்கிரிப்ட் வைத்திருக்கும் உதவி இயக்குனர்கள் கதை சொல்லலாம்..!

hindi film produced by aamir khan actor sivakarthikeyan confirmed
hindi film produced by aamir khan actor sivakarthikeyan confirmed