கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணையும் புதிய படத்தின் அறிவிப்பு!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து புதிய தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக #Karthi30 என அழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்குகிறார். கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.
சமீபத்தில் பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முக்கிய காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வரும் நிலையில், படக்குழு அடுத்த கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை வழங்கிய சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், மீண்டும் ஒரு பெரிய முயற்சியுடன் ரசிகர்களை சந்திக்கத் தயாராகி வருகிறது. கார்த்தியின் தனித்துவமான திரை ஆளுமையும், கல்யாண் சங்கரின் இளமையான கதை சொல்லும் பாணியும் இணைவதால், இந்தப் படம் ரசிகர்களிடம் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுமையான கதைக்களம், சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அம்சங்களுடன் உருவாகி வரும் இப்படம் குறித்த முக்கிய அப்டேட்கள் விரைவில் வெளியாக உள்ளன. குறிப்பாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான நட்சத்திரக் கூட்டணி, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனம் மற்றும் திறமையான இயக்குநரின் இணைப்பால், #Karthi30 தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.
