கவிஞர் வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்

Web Ads

தமிழ் இலக்கியத்திலும், திரையுலகிலும் தனித்துவமான முத்திரை பதித்துள்ள கவிப்பேரரசு வைரமுத்து இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

1980-ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான வைரமுத்து, “இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதுவரை 8,000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ள அவர், கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, சுயசரிதை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பதிவில் வைரமுத்துவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “பாட்டுக்குள் கவித்துவத்தைப் பொதிந்துவைத்த கவிதைத் தோழர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். வாழிய நீடு.” என்று பதிவிட்டுள்ளார்.

Web Ad 2

இதற்கிடையே, இந்திய இலக்கிய உலகின் உயரிய அங்கீகாரமாக கருதப்படும் ஞானபீட விருது, இன்று (ஜூலை 13) டெல்லியில் வைரமுத்துவுக்கு வழங்கப்படுகிறது. தனது பிறந்தநாளன்றே இந்த உயரிய விருதைப் பெறுவது அவரது இலக்கியப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.