சண்முக பாண்டியன் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்!

Web Ads

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில், எல்.கே. சுதீஷ் எம்.பி. தயாரிக்கும் ஒன்பதாவது திரைப்படமான ‘வாணவேடிக்கை’ இன்று சென்னையில் பூஜையுடன் இனிதே தொடங்கியது. நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படம், குடும்ப உணர்வுகளும் வணிக அம்சங்களும் கலந்த திரைப்படமாக உருவாகிறது.

படத்தின் தொடக்க விழாவில், பிரேமதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். தயாரிப்பாளர் எல்.கே. சுதீஷ் எம்.பி.யின் மனைவி பூர்ண ஜோதி கிளாப் அடித்து முதல் காட்சி படமாக்கப்பட்டது.

‘நான் சிகப்பு மனிதன்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் திரு, இந்தப் படத்தை இயக்குகிறார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சுசீந்திரன் மற்றும் ஜெயம் ராஜா கலந்து கொண்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இப்படத்தில் சரவணன், இயக்குநர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜெயப்பிரகாஷ், கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Web Ad 2

படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ். இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ்கமல், படத்தொகுப்பை பிரேம்குமார் கவனிக்கின்றனர்.

‘வாணவேடிக்கை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெற உள்ளது.

படம் குறித்து இயக்குநர் திரு கூறுகையில், “இதுவரை ரசிகர்கள் பார்த்திராத சண்முக பாண்டியனை இந்தப் படத்தில் காண்பீர்கள். தந்தை-மகன் உறவின் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்ட அழகிய கமர்ஷியல் திரைப்படமாக இது உருவாகி வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும்,” என்றார்.