வேலவன் ஸ்டோர்ஸில் ‘சின்ன மருமகள்’ ஸ்வேதா ஷாப்பிங் – அசத்தும் ஆடை கலெக்ஷன்கள்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘சின்ன மருமகள்’ தொடரில் தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வேதா, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.
வேலவன் ஸ்டோர்ஸில் இடம்பெற்றிருந்த விதவிதமான புடவை, சுடிதார், லெஹங்கா உள்ளிட்ட பெண்களுக்கான ஆடை கலெக்ஷன்களை பார்வையிட்ட ஸ்வேதா, தனக்குப் பிடித்த பல்வேறு டிசைன்களை தேர்வு செய்து வாங்கியுள்ளார்.
இங்கு டிரெண்டியான டிசைன்கள், புதுமையான கலர் காம்பினேஷன்கள் மற்றும் பல்வேறு ரகங்களில் புடவை கலெக்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. பனாரஸ் சில்க் உள்ளிட்ட பல்வேறு வகையான புடவைகளும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கிடைக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட புடவை கலெக்ஷன்களில் Buy 1 Get 1 உள்ளிட்ட சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
பெண்களுக்கான சுடிதார் மற்றும் லெஹங்கா கலெக்ஷன்களிலும் பல்வேறு ஆஃபர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 3 பீஸ் சுடிதார் ₹650 என்ற சலுகை விலையிலும் பல்வேறு டிசைன்களில் கிடைக்கிறது.
குழந்தைகளுக்கான ஆடைகளிலும் சிறப்பு சலுகைகள் உள்ளன. சிறுமிகளுக்கான ஃப்ராக், டாப்ஸ் உள்ளிட்ட ஆடைகள் 3 பீஸ் ₹500 என்ற விலையிலும், சிறுவர்களுக்கான சட்டைகள் உள்ளிட்ட ஆடைகள் 4 பீஸ் ₹1,000 போன்ற சலுகைகளிலும் கிடைக்கின்றன.

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான ஆடைகளை ஒரே இடத்தில் வாங்கும் வகையில் பல்வேறு பிரிவுகளுடன் வேலவன் ஸ்டோர்ஸ் செயல்பட்டு வருகிறது.
பிரசாந்த் டவர்ஸ் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் இறங்கியவுடன் இடதுபுறத்தில் வேலவன் ஸ்டோர்ஸ் அமைந்துள்ளது. டூ-வீலர் மற்றும் ஃபோர்-வீலர் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதியும் உள்ளது. ரயில் மற்றும் பேருந்து மூலம் வரும் வாடிக்கையாளர்களும் எளிதில் அணுகக்கூடிய வகையில் இந்த ஷோரூம் அமைந்துள்ளது.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையைச் சேர்ந்த பல பிரபலங்கள் ஏற்கனவே வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ள நிலையில், தற்போது ‘சின்ன மருமகள்’ ஸ்வேதாவின் வருகையும் ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
புதிய டிசைன்கள், பல்வேறு ஆடை கலெக்ஷன்கள் மற்றும் சிறப்பு சலுகைகளுடன் வேலவன் ஸ்டோர்ஸ் ஷாப்பிங் பிரியர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.