அனிருத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் விடுத்துள்ள வேண்டுகோள்; கடைப்பிடிப்பாரா?
காலம் கடந்தும் நிலைக்கும் இசை குறித்து, ரஹ்மான் அனிருத்துக்கு விடுத்துள்ள வேண்டுகோள் பார்ப்போம்..
தமிழ் சினிமாவில் தடம் பதித்து வந்த அனிருத் தற்போது ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் பிஸியாகி இருக்கிறார். ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கீர்த்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அனிருத்தும் கலந்துகொண்டார். அப்போது பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் அனிருத்திடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். அவர் பேசுகையில்,
‘அனிருத் இப்போது நன்றாக இசையமைத்து வருகிறார். ஏராளமான இசையமைப்பாளர்கள் இப்போது இருக்கிறார்கள். அந்தப் போட்டியில் நிலைத்து நிற்பது பெரிய விஷயம். திறமை இல்லாமல் அப்படி நிலைக்க முடியாது.
உங்களுக்கு ஒரு வேண்டுகோள் அனிருத். க்ளாசிக்கல் இசையை படித்துவிட்டு அதில் நீங்கள் நிறைய பாடல்களை உருவாக்க வேண்டும். அப்படி நீங்கள் செய்தால், அந்த இசை இளம் தலைமுறையினருக்கு அதிகம் போய் சேரும்’ என்றார்.
அனிருத்தின் இசையமைப்பில் அடுத்ததாக விடாமுயற்சி, கூலி, தளபதி69 உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘ரஹ்மான் குறிப்பிட்ட க்ளாஸிக்கல் மியூசிக் தெரியாமலே, பின்னணி பலத்துடன்தான் வாய்ப்பை பெற்று, ஏதோ ‘டமார் டப்பாரானு’ ஊதி தள்ளிக்கொண்டே தொடர்கிறார்’ என இணையவாசிகள் கமெண்ட் செய்வது வைரலாகி வருகிறது.