Pushpa 2

நடிகர் விஷால் உடல்நிலை குறித்து, அவரது மேலாளர் கூறிய தகவல்..

விஷாலின் உடல்நிலை பற்றி, அவரது மேலாளர் கூறியுள்ள தகவல் காண்போம்..

விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு பின் வெளியாக உள்ள, ‘மத கஜ ராஜா’ திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் சமீபத்தில் கலந்துகொண்ட விஷாலை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மிகவும் ஒல்லியாக மாறி, முகம் வீங்கி, கைகள் நடுக்கத்துடன் வந்தார். விஷாலை பத்திரமாக இருக்கையில் அமர வைத்ததுகூட, நடிகர் மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தான்.

விஷால் தீவிர வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக முழு பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவர் கைப்பட எழுதிய ஒரு அறிக்கை வெளியானது. விஷால் தற்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் விஷால் அனுமதிக்கப்பட்டதாக ஒரு தகவல் பரவிய நிலையில், இதற்கு விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது,

‘நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் வதந்தி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவர் வீட்டில் இருந்து ஓய்வெடுத்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட காய்ச்சல் வந்த காரணத்தால், உடல் நடுக்கம் மற்றும் சற்று சோர்வாக காணப்பட்டார். அவர் பூரண நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாட்களில் முழுமையாக குணமாகி விடுவார்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், விஷாலின் ரசிகர்கள் அவர் பூரண குணமடைய வேண்டும் என, பல இடங்களில் அர்ச்சனை, பூஜைகள், அன்னதானங்கள், போன்றவற்றை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

actor vishal hospitalized manager clarifies on rumours
actor vishal hospitalized manager clarifies on rumours