‘கேம் சேஞ்சர்’ ரிலீஸிற்கு பிறகு, சமந்தாவுடன் இணைகிறார் ராம்சரண்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் ராம்சரண். இப்படம் வருகிற 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்த படத்தை, தில் ராஜு தயாரித்துள்ளார். படத்தில் ராம் சரண் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அப்பா ராம் சரணுக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ள நிலையில், மகன் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனுக்காக கலந்துகொண்டும், பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது ராம் சரணிடம், ‘இதுவரை பல முன்னணி நடிகைகளுடன் நடித்துள்ளீர்கள். அவர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தவர் யார்? என்று கேட்டு, 3 சாய்ஸ் கொடுத்தார். அதில் ஆலியா பட், கியாரா அத்வானி மற்றும் சமந்தாவின் பெயர் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு ராம்சரண், சமந்தாவின் பெயரை கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
நடிகை சமந்தா மற்றும் ராம்சரண் இருவரும், கடந்த 2018-ஆம் ஆண்டு ‘புஷ்பா’ பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் ராம்சரண் மற்றும் சமந்தாவின் நடிப்பு பாராட்டை பெற்ற போதிலும், வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்சரண் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ரிலீசுக்கு பிறகு, புச்சிபாபு சனா இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய படத்தின் ஷூட் துவங்குகிறது. நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்று, தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, இப்படத்தில் மீண்டும் ராம்சரணுடன் இணைவாரா? எனவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.