சினிமாவில் 51ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக அவர் உயர்ந்துள்ள நிலையில், அவரது 51 ஆண்டுகால திரைப்பயணத்தை நினைவுகூரும் வகையில் ‘தர்மன்’ படக்குழுவினர் இந்தக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் ‘தர்மன்’ படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு கேக் வெட்டி மகிழ்ந்தனர். ‘ரஜினியிசம்’ எனும் தனித்துவமான பாணியையும், ரசிகர்களுக்கு அவர் அளித்துள்ள உத்வேகத்தையும் கொண்டாடும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது.

Web Ad 2

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

ரஜினிகாந்தின் 51 ஆண்டுகால திரைப்பயணம் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது அடுத்த தலைமுறை திரைப்படமான ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்ற இந்தக் கொண்டாட்டம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.