பிரபாஸின் ‘ஃபௌஜி’ படத்தில் சுதந்திர தின ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

Web Ads

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கத்தில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம், டி-சீரிஸ் வழங்கும் நிலையில், வரும் டிசம்பர் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘ஃபௌஜி’ படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுதந்திரம் கிடைத்ததன் பின்னணியில் இருந்த போராட்டம் மற்றும் தியாகத்தை நினைவுகூரும் வகையில் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

போர் சூழலை பிரதிபலிக்கும் வகையில் புகை, தீப்பிழம்புகள், சிதைந்த கட்டிடங்கள் என பரபரப்பான பின்னணியில் சார்மினார் இடம்பெற்றுள்ளது. பிரபாஸின் முகம் காட்டப்படாத நிலையில், ரத்தம் மற்றும் அழுக்கு படிந்த உடையுடன், இரு கைகளிலும் துப்பாக்கிகளை ஏந்தியபடி செருப்பு இல்லாமல் அவர் நடந்து வரும் காட்சி இடம்பெற்றுள்ளது.

“சுதந்திரம் கொண்டாட்டமாக மாறுவதற்கு முன்பு, அது ஒரு போராக இருந்தது!” என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது.

Web Ad 2

மேலும், “நமது நாளைக்காகப் போராடிய ஒவ்வொரு ஃபௌஜியின் வீரத்திற்கும் தலைவணங்குகிறோம்” என்ற படக்குழுவின் செய்தியும் இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

ஹனு ராகவபூடி எழுதி இயக்கும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி நடிக்கிறார். மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கேர், ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுதீப் சட்டர்ஜி ISC ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். அனில் விலாஸ் ஜாதவ் தயாரிப்பு வடிவமைப்பையும், கோடகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர்.

நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார் இணைந்து தயாரிக்கும் ‘ஃபௌஜி’, இதுவரை வெளியான ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.