மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்தின் ‘தி டோர்ம்’ ஃபர்ஸ்ட் லுக்!

Web Ads

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘தி டோர்ம் – The Dorm’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் தீபா ஸ்ரீதர் இயக்கியுள்ள இப்படத்தில் முனீஸ்காந்துடன் சமூக வலைதளங்களில் பிரபலமான சபரீஷ், அருண் கார்த்தி, சாம் ஜான், நிகில் நாயர், ஷாலினி காசித்தங்கம், வசுந்தரா ஸ்ரீநாத், சிந்து மற்றும் ஃபெரோஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இளையராஜா முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, ஷாம் விஷால் மற்றும் செபாஸ்டியன் ரொஸாரியோ இணைந்து இசையமைத்துள்ளனர். கு. கார்த்திக் வசனம் எழுத, அனில் கிரிஷ் படத்தொகுப்பையும், அமர் கீர்த்தி கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

Web Ad 2

குட் ஸ்டஃப் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஈ.ஆர். டில்லி பலராமன் மற்றும் ஜெகதீஸ்வரன் டில்லி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் லைன் புரொடக்ஷன் பணிகளை கிளஸ்டர்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சுரேஷ் செல்லப்பன் மற்றும் அருண் கார்த்திக் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘தி டோர்ம்’ படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. முனீஸ்காந்தின் வித்தியாசமான தோற்றம் மற்றும் இளம் நட்சத்திரங்களின் சமூக வலைதள கலாட்டாக்களை பிரதிபலிக்கும் வகையில் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.