நயன்தாரா-தனுஷ் வழக்கில், நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
நயன்தாரா திருமண வீடியோ குறித்த வழக்கில், நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு பற்றிப் பார்ப்போம்..
நயன்தாரா திருமணம் குறித்த வீடியோ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இதை Nayanthara: Beyond the Fairytale என்கிற பெயரில் ஒரு ஆவண படமாக நெட்பிளிக்ஸ் வெளியிட்டது. இதற்காக, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் 25 கோடி வாங்கியதாகவும் தகவல் வெளியானது.
திருமணத்திற்கான மொத்த செலவே ரூ. 5 கோடி கூட வராத நிலையில், தனது திருமணத்தை வைத்து பல கோடி லாபம் பார்த்ததாக சில விமர்சகர்கள் நயன்தாராவை விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், ஆவணப்படத்தில்,
தனுஷ் தயாரிப்பில் 2015-ம் ஆண்டு, நயன்தாரா- விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ பட காட்சிகளும் இடம்பெற்றது.
தனுஷ், தன்னுடைய அனுமதியின்றி தான் தயாரித்த படத்தின் காட்சியை பயன்படுத்தியதற்காக சுமார் 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்ப, இதற்கு நயன்தாரா தரப்பிலிருந்து அறிக்கை வெளியிட்டு, ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதைத் தொடர்ந்து, நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும் என தனுஷ் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம் அவருக்கு வழக்கு தொடர அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து ‘நானும் ரவுடிதான்’ பட காட்சியை பயன்படுத்துவதற்காக நடிகர் தனுஷ், நயன்தாரா ரூ.10 கோடி இழப்பீடு தரவேண்டும் என வலியுறுத்தியதோடு, இந்த காட்சியை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், இது குறித்து நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்குமாறு நீதிமன்றம் கூறியது. இதற்கு நயன்தாரா திரைப்படத்தில் பயன்படுத்திய காட்சியை இப்படத்தில் இணைக்கவில்லை என்றும், தங்களுடைய சொந்த சேகரிப்பில் இருந்தே இந்த காட்சியை பயன்படுத்தியதாக விளக்கம் கொடுத்தார்.
இந்த சம்பவம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை, நீதிபதி அப்துல் குத்தூஸ், முன்பு விசாரணைக்கு வந்தபோது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, இனிமேல் கால அவகாசம் கேட்கக்கூடாது என்றும், அந்நாளில் அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிவைத்தார்.
நயன்தாராவுக்கு சாதகமாக தீர்ப்பு வருமா? அல்லது தனுஷுக்கு சாதகமாக தீர்ப்பு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.