Pushpa 2

கோபப்பட்ட சுந்தரவல்லி, சூர்யா சொன்ன வார்த்தை,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 09-01-25
Moondru Mudichu Serial Today Promo Update 09-01-25

நேற்றைய எபிசோடில் அனைவரும் தாலி பிரித்து கோர்க்க உட்கார சம்பிரதாயம் ஆரம்பித்து மஞ்சள் கயிறு கழுத்தில் போட்டுக் கொண்டு அந்த கயிறு கழட்டி கொடுக்குமாறு சொல்லுகின்றனர். பிறகு விஜியும் அங்கு இருக்கும் ஒருவரும் சேர்த்து மாங்கல்யத்தை கோர்த்து மஞ்சள் குங்குமம் வைக்கின்றனர். அந்த தாலியை விஜி அருணாச்சலத்திடம்கொடுத்து சூர்யா அண்ணா கிட்ட கொடுத்து போட்டு விட சொல்லுங்க என்று சொல்லுகிறார். பிறகு தட்டில் இருக்கும் பூக்களை அனைவருக்கும் கொடுக்க சூர்யா நந்தினி கழுத்தில் தாலி செயின் போட்டு விட அனைவரும் ஆசீர்வாதம் செய்கின்றனர். பிறகு சூர்யா மாங்கல்யத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து நந்தினிக்கு நெற்றியிலும் வைத்துக் விடுகிறார்.

மறுபக்கம் சுந்தரவல்லி ஒரு ஒரு தடவையும் அவகிட்ட தோற்றுகிட்டே இருக்கேன் என்று டென்ஷனாக ரூமில் நடந்து கொண்டிருக்கிறார். அருணாச்சலம் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு தான் போகணும் என்று சொல்லிவிட நந்தினி அந்த தாம்பூலபை கொடுங்க அக்கா என்று விஜயிடம் சொல்லுகிறார். பிறகு அனைவரும் தாம்பூலம் வாங்கிக் கொண்டு கிளம்புகின்றனர். விஜி வெளியில் கிளம்பி வர நந்தினி ரொம்ப நன்றிக்கா என்று சொல்லுகிறார். கொஞ்சம் சிரி நந்தினி என்று சொல்ல சிரிக்கிற மாதிரியா இங்க நடந்திருக்கு என்று கேட்கிறார். சுந்தரவல்லி அம்மா இப்போ என்ன நினைச்சுட்டு இருப்பாங்கன்னு தெரியுமா அவங்க நினைச்ச மாதிரி நடக்கல,இப்போ என் மேல எவ்வளவு கோபமா இருப்பாங்க தெரியுமா என்று சொல்லுகிறார். சார் அண்ணனும் உனக்கு இவ்வளவு சப்போர்ட்டா இருக்கும்போது நீ எதைப் பத்தியும் யோசிக்காத என்று சொல்லி தைரியமாக இருக்க சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

அசோகன்,மாதவி, சுரேகா என மூவரும் நகை எப்படி நந்தினி கிட்ட போயிருக்கும் என்று யோசிக்கின்றன. சுரேகா பேசாம அவ கிட்ட கேட்டுடலாமா என்று சொல்ல, எப்படி நாங்கதான ஒலிக்க வச்சோம் உன் கைக்கு எப்படி வந்துச்சுன்னு கேக்க சொல்றியா எதுவும் வேணாம் அமைதியா இரு என்று சொல்லுகிறார். அதுவும் இல்லாம நம்ப தான் எடுத்து வெச்சோம் என்பது அவளுக்கே தெரிஞ்சிருக்கும். அதனாலதான் நகை கொடுக்கும்போது நான் தான் எடுத்து வச்சேன்னு சொன்னா பாத்தாலே என்று சொல்லுகிறார். அருணாச்சலம் உட்கார்ந்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து நந்தினியை கூப்பிடுகிறார். நான் உன்கிட்ட ஒன்னு கேட்கிறேன் மறைக்காம உண்மையை சொல்லு என்று கேட்கிறார். இதுக்கு முன்னாடி உன்கிட்ட தாலி பிரித்து கோர்க்கும் விஷயத்தை பத்தி பேசும்போது ஒத்துக்கல அப்புறம் சூர்யாவிற்கு அடிபட்டதுக்கப்புறம் அரை மனசோட ஒத்துக்கிட்ட ஆனா இப்போ தாலி பிரித்துக் கோர்ப்பதில் விருப்பம் இல்லைன்னு எடுத்து வச்சிக்கிட்டேன்னு சொல்ற இது மாதிரி பண்ற ஆள் நீ கிடையாது என்ன விஷயம் சொல்லு எப்படி உன் கையில எப்படி தாலி செயின் வந்தது என்று கேட்கிறார்.

நடந்தது என்னன்னு சொல்லு என்று கேட்க, போலீஸ் வந்தவுடன் சுந்தரவல்லி இடம் மாதவி மற்றும் சுரேகா இருவரும் நீங்கதான் தாலி செயின் எடுத்து வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சா பிரச்சனையாகிடும் நம்ம சொல்லிடலாம். அதற்கு சுந்தரவல்லி எந்த ரூம்ல வேணா செக் பண்ணட்டும் ஆனா என் ரூம பாக்க விடமாட்டேன் என்று சொல்லுகிறார். இப்ப கூட ஒன்னும் பிரச்சனை இல்ல நாம் வேற எங்கேயோ வச்சுடன் கூட சொல்லி கொடுத்துடுறேன் என்று சொல்லியும் சுந்தரவல்லி எதுவும் வேண்டாம் என்று சொல்லுகிறார் இதனை நந்தினி மறைந்திருந்து கேட்டு விடுகிறார். இதைக் கேட்டதுக்கு அப்புறம் தான் இந்தக் குடும்பத்தோட கௌரவம் அந்தஸ்து என எதுவும் கெட்டுப் போயிடக் கூடாது என்று தப்புன்னு தெரிஞ்சோ அதை தாலி எடுத்துட்டு வந்தேன் என்று சொல்லுகிறார்.

என்ன சொல்றதுன்னே தெரியல நந்தினி. தாலி செயின் உன் கையில பார்த்த உடனே எனக்கு ஒண்ணுமே புரியல சரி சடங்கு எல்லாம் முடியட்டும்னு பேசிக்கலாம்னு இருந்த, இப்ப கேட்டா நீ இப்படி எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க, மனசார சொல்ற அம்மா உன்ன மாதிரி பெருந்தன்மையா யாரும் இருக்க மாட்டாங்க. இத மட்டும் நீ பண்ணலனா சூர்யா இருந்த கோபத்துக்கு சுந்தரவள்ளிய ஸ்டேஷன்ல உட்கார வைத்திருப்பான்.

உனக்கு ஒரு செகண்ட் கூட நம்மள திட்டுனவல ஏன் காப்பாற்ற வேண்டும் என்று உனக்குத் தோணலையா என்று சொல்ல எனக்கு தோணாது ஐயா நாங்க கஷ்டத்துல இருக்கும் போது உதவின குடும்பம் நீங்க அது எப்படி என்னால அப்படி இருக்க முடியும் என்று கேட்கிறார்.

உங்க குடும்ப கோபுரம் ஐயா உங்க குடும்பத்துல இருக்குறவங்க யாரும் தலைகுனியக் கூடாது அதை எப்பவுமே செய்யமாட்ட நான் எதாவது தப்பா பேசிருந்தா என்னை மன்னிச்சுடுங்க என்று கையெடுத்து கும்பிடுகிறார். பிறகு சுந்தரவல்லி இடம் வந்து அவளுக்குத் தெரிஞ்சுதான் எல்லாமே பண்ணியிருக்கா என்று சொல்ல அப்போ இந்த வாட்டியும் நந்தினி தான் அம்மாவ காப்பாத்தி இருக்காளா என்று கேட்க சுந்தரவல்லி கோபப்படுகிறார். அவ என்ன காபாதுறாலா என்று சொல்லி கோபப்பட்டு ரூமில் இருந்து எங்க அவ என்று கோபப்பட்டு எழுந்திருக்கிறார். இருவரும் சுந்தரவல்லியை சமாதானப்படுத்தி உட்கார வைக்கின்றனர். உங்கள கோபப்படுத்த இது சொல்லல இது தெரிஞ்சுக்கணும்னு தான் சொல்ற கொஞ்ச நாள் அமைதியா இருங்க எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம். ஒவ்வொரு வாட்டியும் ஜெயிக்கிட்டே இருக்கா நான் அதை வேடிக்கை பார்க்கணுமா இப்பயும் என் கண்ணு முன்னாடியே தாலி பிடிச்சு கோக்குற ஃபங்ஷனை பிக்ஸ் பண்ணாங்க அதை நல்லபடியா நடத்தி முடிச்சிட்டாங்க என்று கோபப்பட இப்ப இருக்குற சிச்சுவேஷன்ல நீங்க எதுவும் பேசாதீங்க. இப்ப கூட அவ மேல தான் பழிய போட்டுக்கிட்டா அந்த பயம் இருக்கிற வரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது விடுங்க என்று சொல்லுகின்றார்.இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்றைய ப்ரோமோவில் அவன் எவ்வளவு தூரம் சொன்னதுக்கு அப்புறம் ஏதாவது சரி கட்டி பண்ண வேண்டும் என்று நினைத்தீர்கள் நடக்கிறதே வேற என்று அருணாச்சலத்திடம் சுந்தரவல்லி சொல்லுகிறார்.அங்கே வந்து சூர்யா நான் மட்டும் இல்ல நானும் என்னோட அழகு பொண்டாட்டியும் சேர்ந்து ஜோடியா போ போறோம் என்று சொல்லுகிறார்.

ஐயா ஊருக்கு சூர்யா சார் கட்டாயம் வருவாரா என்று நந்தினி கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 09-01-25
Moondru Mudichu Serial Today Promo Update 09-01-25