இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி!

Web Ads

எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி, தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இந்த திரைப்படத்தின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பல விதமான கதாபாத்திரங்களில் தனது திறமையை நிரூபித்து வந்த ராம், சமீபத்தில் வெளியான ‘ஆந்திரா கிங் தாலுகா’ படத்தில் பாடல் வரிகள் எழுதியதுடன், பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருந்தார். தற்போது, இயக்குநராகவும் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.

#RAPO23 திரைப்படம் ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் இந்த ஜானர், ஏற்கனவே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியான போஸ்டரில் ராம் போதினேனி ‘வீரா’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். லெதர் ஜாக்கெட், V-cut ஹேர் ஸ்டைல் மற்றும் டார்க் மூடில் வடிவமைக்கப்பட்டுள்ள அவரது தோற்றம், கதையின் இன்டென்ஸ் தன்மையை வெளிப்படுத்துகிறது.

Web Ad 2

போஸ்டரில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான சிவப்பு நிற “V”, ‘வீரா’வையும், போராட்டம் மற்றும் ஆதிக்கத்தையும் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. “The Story of a Lone Wolf” என்ற டேக் லைன், மனஅழுத்தம் மற்றும் தனிமையை மையமாகக் கொண்ட கதாபாத்திரத்தை சுட்டிக்காட்டுகிறது.

ராம் போதினேனி தானே எழுதி இயக்கும் இந்த திரைப்படம், புதுமையான கதைக்களத்துடன் உருவாகும் என கூறப்படுகிறது. ‘வீரா’ கதாபாத்திரத்தில் அவர் இதுவரை இல்லாத புதிய லுக்கில் தோன்றவுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது. படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.