96 பிரேம்குமார் இயக்கத்தில் பகத் பாசில்! பூஜையுடன் துவங்கியது!

Web Ads

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், “96” மற்றும் “மெய்யழகன்” படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில், முன்னணி நடிகர் பகத் பாசில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.

ஐசரி கே. கணேஷ் தலைமையிலான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக உருவாகும் இந்த படம், அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில், தனித்துவமான கதைகள் மற்றும் ஆழமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் புகழ்பெற்றவர். அதேபோல், உணர்வுப்பூர்வமான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த C. பிரேம்குமார் உடன் அவர் முதன்முறையாக இணைவது திரையுலகில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், வணிக ரீதியிலும் உள்ளடக்க ரீதியிலும் வெற்றி பெற்ற பல படங்களை தயாரித்துள்ளது. தற்போது இந்த புதிய கூட்டணியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Web Ad 2

“96” மற்றும் “மெய்யழகன்” போன்ற மனதை வருடும் திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள C. பிரேம்குமார், எளிமையான காட்சியமைப்புகள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் பாராட்டப்பட்டவர். இந்த புதிய படமும் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இயக்குநர் பிரேம்குமாரின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.