டேட்டிங் ஷோவை தொகுத்து வழங்கும் ரம்யாகிருஷ்ணன்

Web Ads

காதலுக்கு காரணம் தேவையில்லை… ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்!

தமிழ் ரசிகர்களுக்காக முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில், ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய ஒரிஜினல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘செகண்ட் லவ்’-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காதலுக்கு இரண்டாவது வாய்ப்பு என்ற அழகான கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி, தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ஜூலை 13 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஸ்ட்ரீமிங் ஆகிறது.

இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். மேலும், நடிகை ஸ்ருதிகா அர்ஜூன் “கியூபிட்” கதாபாத்திரத்தில் தோன்றி, போட்டியாளர்களின் புதிய காதல் பயணத்தில் முக்கிய பங்காற்றுகிறார்.

நிகழ்ச்சியின் முதல் புரோமோ, வண்ணமயமான இசை வீடியோ வடிவில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காதலில் ஏற்பட்ட காயங்களிலிருந்து மீண்டு, புதிய உறவுகளை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை இந்த புரோமோ அழகாக வெளிப்படுத்துகிறது. அதன் நிறைவில், “காதலுக்கு காரணம் தேவையில்லை… இது காதலின் பிராண்ட் நியூ சீசன்” என்ற ரம்யா கிருஷ்ணனின் வரிகள் நிகழ்ச்சியின் மையக் கருத்தை உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கின்றன.

கடந்த கால அனுபவங்களைத் தாண்டி, வாழ்க்கையில் புதிய உறவுகளையும் காதலையும் தேடுபவர்களுக்கு மறுமுறை வாய்ப்பை வழங்கும் நோக்கில் ‘செகண்ட் லவ்’ உருவாக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை, மனமாற்றம், உணர்வுப்பூர்வமான தருணங்கள், நகைச்சுவை மற்றும் மனித உறவுகளின் அழகை ஒன்றாக இணைக்கும் இந்த நிகழ்ச்சி, இன்றைய தலைமுறையின் உறவுகளை புதிய கோணத்தில் பதிவு செய்யவுள்ளது.

பிக் பாஸ் உள்ளிட்ட வெற்றிகரமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை வழங்கிய ஜியோஹாட்ஸ்டார் – பனிஜாய் ஆசியா கூட்டணி, தற்போது ‘செகண்ட் லவ்’ மூலம் தமிழ் பார்வையாளர்களுக்கு மேலும் ஒரு புதுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.

நம்பிக்கை, மனமாற்றம் மற்றும் காதலை கொண்டாடும் தனித்துவமான ஒரிஜினல் நிகழ்ச்சியாக ‘செகண்ட் லவ்’ ஜியோஹாட்ஸ்டாரின் முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக இணைந்துள்ளது.

‘செகண்ட் லவ்’ தொடர்பான புதிய அப்டேட்களை அறிய, ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் தமிழ் சமூக வலைதளப் பக்கங்களைப் பின்தொடரலாம்.

ஜூலை 13 முதல் ‘செகண்ட் லவ்’ ஜியோஹாட்ஸ்டாரில் தமிழில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது.