திட்டம் போட்டு நந்தினி மீது பழி போட்ட சுந்தரவல்லி, கோபப்பட்ட அருணாச்சலம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நான் நீங்க சொன்ன மாதிரி இங்கிலீஷ்ல பேசி இருந்தா பிரச்சனை பெருசா இருக்கும் என்று சொல்ல இப்ப மட்டும் என்ன எந்த பிரச்சனையும் இல்லையா என்று கேட்கிறார். இதுவரைக்கும் நீ வெறும் நந்தினி இதுக்கப்புறம் நீ நந்தினி சூர்யா என சொல்லுகிறார். நீயே எதனா செய்றேன்னு ஏதாவது சொதப்பாதா நான் சொல்றத மட்டும் செய்யணும்னு சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் மாதவி சுரேகா சுந்தரவல்லி மூவரும் பேசிக்கொண்டிருக்க மாதவி நம்ம என்ன பண்ணாலும் அவ தப்பிச்சுக்கிட்டே இருக்கா இதுக்கெல்லாம் முடிவே இல்லையா அம்மா என்ன பண்ணலாம் என்று கேட்கிறார். அவள வீட்டை விட்டு போக வைக்கணும் என்று சொல்ல அவ போக மாட்டா சூரியா அவளுக்கு பேக் போன இருக்கான். சூர்யாவை அவன் வாயாலேயே அவளை வீட்டை விட்டு போக சொல்லணும், சொல்ல வைக்கணும் அதுக்கு முதல்ல அவங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு மிகப்பெரிய சண்டையை உருவாக்கணும் அதை செய்ய வைக்கணும் வேற வழியே இல்லை என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து மேனேஜர் நாளைக்கு பத்து மணிக்கு ஒரு மீட்டிங் இருக்கு நீங்க வரணும் என்று சொல்ல சுந்தரவல்லி யோசித்து விட்டு எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல சூர்யா சாருக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு மாதவியிடம் நீ எனக்காக ஒரு விஷயம் பண்ணு என்று சுந்தரவல்லி மாதவி இடம் சொல்லுகிறார்.
மறுபக்கம் மேனேஜர் சூர்யாவிற்கு ஃபோன் போட்டு மீட்டிங் இருக்கும் விஷயத்தை சொல்ல நான் மட்டும் இல்ல, நந்தினியும் சேர்ந்து வந்துடுவோம் இதுக்கு மேல அம்மாவுக்கு வயசு ஆயிடுச்சுங்களா நாங்களே பாத்துக்கவந்துடுவோம் சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறார். பிறகு சூர்யா நந்தினியிடம் வந்து நாளைக்கு மீட்டிங் போறோம் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் என சொல்லுகிறார். நந்தினி எனக்கு அதெல்லாம் தெரியாது என்று சொல்ல சூர்யா பிசினஸை எப்படி செய்ய வேண்டும் என்பதை தமிழில் நந்தினிக்கு புரிய வைக்கிறார். எனக்கு கேட்கும் போதே தல சுத்துது என்று சொல்ல அதெல்லாம் தேவையில்லை நீ கண்டிப்பா வர நம்ம மீட்டிங்கு போறோம் நம்ப நாளைக்கு 9 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பறோம் என சொல்லிவிட்டு தூங்கப் போகிறார் பிறகு இருவரும் தூங்கி விட மாதவி ரூமுக்குள் வருகிறார்.
இரண்டு பேரும் தூங்கிக் கொண்டிருக்க மாதவி கார் சாவி எடுத்துக் கொண்டு வந்து சுந்தரவள்ளியிடம் கொடுக்க கார் சாவி வச்சு என்ன பண்ண போறீங்க என்று கேட்க காலைல எழுந்தா தெரியும் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுநாள் காலையில் சுந்தரவல்லி கார் சாவியை சுரேக்காவிடம் கொடுத்து காரில் வைக்க சொல்லிவிட்டு ஒரு பிளானை சொல்லி உள்ளே அனுப்புகிறார். இருவரும் உள்ளே வந்து உட்கார்ந்து விட்டு நந்தினி வந்தவுடன் டீ வேண்டும் காபி வேண்டும் என கேட்கின்றனர். சுரேகா இவளை எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் எல்லா வேலையும் செய்றா என்று சொல்ல அது அவ ஜீன்லயே இருக்கும் என சொல்லுகிறார்.
உடனே அம்மாவுக்கு போன் போட்டு வர சொல்லலாம் என்று சொல்ல,சுந்தரவல்லி ஒன்றும் தெரியாதது போல் வந்து உட்கார்ந்து இந்த சூர்யாவுக்கு அறிவே இல்லை எதை எங்க வைக்கணும்னு தெரியல என்று சொன்ன மாதவி என்ன விஷயம் என்று கேட்கிறார். சூர்யா காருக்குள்ளேவே சாவியை வச்சிட்டு போயிருக்கா யாராவது எடுத்துட்டு போய்ட்டா என்ன பண்றது என்று சொல்லிக் கொண்டிருக்க நந்தினி அதுவு கார் யாராவது எடுத்துட்டு போய்டா பிரச்சனை ஆகும் நம்ம சாவி எடுத்துக்கொண்டு வந்து வைத்துவிடலாம் என மனதில் நினைக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவின் ரூமில் இருக்கும் சரக்கு பாட்டில்களை மாதவி சுந்தரவல்லி சொன்னதை கேட்டு அவரது ரூமில் எடுத்து வைத்துக் கொள்கிறார்.சூர்யா ரூமில் சரக்கு பாட்டில்கள் இல்லாததால் நந்தினி மீது கோபமாக பேசுகிறார் உன்னைத் தவிர வேறு யாரும் என்னோட ரூம்குள்ள இருந்து சரக்கு பாட்டில் எடுக்க மாட்டாங்க எங்க வெச்சி இருக்க சொல்லு என்று கேட்கிறார். நிஜமாகவே எனக்கு தெரியாது என்று நந்தினி சொல்ல அதெல்லாம் எனக்கு தெரியாது டாடி எனக்கு சரக்கு வேணும் வேணும் என்று கத்த அருணாச்சலம் கோபப்பட்டு அதட்டி இப்ப என்னடா ஒரு நாளைக்கு சரக்கு இல்லனா செத்தா போயிடுவேன் என்று கேட்கிறார். இந்தப் பழியில் இருந்து நந்தினி எப்படி தப்பிக்கப் போகிறார் என்பதை இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.
