‘ஜெயிலர் 2’ படத்திற்காக ரஜினியின் புது லுக்: வைரலாகும் நிகழ்வு..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ முதல் பாகத்திற்கு இருந்த ஹைப்பை விட இரண்டாம் பாகத்திற்கு பலமடங்கு கூடுதலாகவே ஹைப் இருக்கின்றது. இன்னும் ஒரு சில மாதங்களுக்குள் மொத்த படப்பிடிப்பும் நிறைவுபெறும் என தெரிகின்றது.

இந்நிலையில், இப்படத்திற்காக ரஜினிகாந்த் தன் கெட்டப்பை லைட்டாக மாற்றியிருக்கிறார். சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் ரஜினி french beard வைத்துக்கொண்டு செம ஸ்டைலாக இருக்கின்றார். ‘ஜெயிலர் 2’ படத்திற்காகவே ரஜினி இந்த கெட்டப்பிற்கு மாறியிருப்பதாக கூறப்படுகிறது. பெரிய அளவில் கெட்டப் மாற்றம் இல்லையென்றாலும் தாடியை ட்ரிம் செய்து french beard லுக்கில் ரஜினி வலம் வரும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கூலி’ படம் 500 கோடி வசூலைக் கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கூலி’ படத்திற்கு பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்கள் இல்லை. ரஜினி என்ற ஒரு பெயருக்காக இப்படம் மாபெரும் அளவில் வசூலை வாரி குவித்து வருகின்றது. ஒரு A சான்று பெற்ற படம் வசூல் சாதனை செய்திருப்பது கவனிக்கத்தக்கது.

இதனைத்தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்றும், அடுத்தாண்டு ஏப்ரல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படமும் வசூலில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘ஜெயிலர் 2’ படத்திற்கு பிறகு, ரஜினி எந்த படத்தில் நடிப்பார் என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகின்றது. மாரி செல்வராஜ், மணிரத்னம் துவங்கி பல இயக்குனர்களின் பெயர்கள் ரஜினியின் 173-வது படத்திற்காக பேசப்படுகிறது. சமீபத்தில் தெலுங்கில் பிரபல இயக்குனரான நாக் அஸ்வினும் ரஜினியை சந்தித்து கதை சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

rajinikanth turns into new look for his next movie called jailer2
rajinikanth turns into new look for his next movie called jailer2