Web Ads

ரெசார்ட்டுக்கு கூப்பிடும் விவேக், சம்மதிப்பாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today promo update 27-02-25
moondru mudichu serial today promo update 27-02-25

நேற்றைய எபிசோடில் சூர்யா போதை ஏற வேண்டும் என்று கடவுளிடம் கெஞ்சி கேட்கிறார். சூப்பரான சைடிஷ் கொடுத்திருக்க எனக்கு புடிச்ச சரக்கு கொடுத்திருக்க போதை ஏறுமா? ஏறாதா? சொல்லு ப்ரோ என்று சொல்லிவிட்டு உன்னை நம்பி குடிக்கட்டா சொல்லு ப்ரோ என்று கெஞ்சுகிறார். என்ன ப்ரோ கூப்பிட்ட உடனே வந்துட்டீங்க என்று சொல்லி கருப்புசாமி புகைப்படத்தை பார்த்து ஓடி வந்து போட்டோ முன் சரக்கை வைத்துவிட்டு, நம்ம ரெண்டு பேரும் ஒன்னுக்குள்ள ஒன்னு உங்களுக்கும் சரக்கு கட்டு கட்டா சுருட்டு வைப்பாங்க நீ எங்க குலதெய்வம் தானே இது போதை ஏறனும் நான் குடிக்க போறேன் இது உன் மேல சத்தியம் என்று சொல்லிவிட்டு சாமி கும்பிட்டு விட்டு குடிக்க போதை ஏறுகிறது என்று சொல்லி கடவுளுக்கு நன்றி சொல்லுகிறார்.

சந்தோஷத்தில் சூர்யா துள்ளி குதித்துக் கொண்டு ஓடி வந்து அருணாச்சலத்தை கூப்பிடுகிறார்.பிறகு வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு சந்தோஷப்பட்டு கத்துகிறார். என்ன விஷயம் என்ன சந்தோஷம் என்று அருணாச்சலம் கேட்கிறார். சுரேகா மாதவியிடம் என்ன விஷயமா இருக்கும்கா என்று கேட்க பாக்கலாம் என்று சொல்லுகிறார். அசோகனிடம் என்ன பார்த்தா ஏதாவது மாற்றம் தெரியுதா என்று கேட்டுவிட்டு நீயே சொல்லு மாப்பிள என்று சொல்லுகிறார் இவ்வளவு நாளா எனக்கு குடிச்சா போதை ஏறாது இல்ல இப்போ அந்த பிராப்ளம் எனக்கு இல்ல, என் உடம்பு சரி ஆயிடுச்சி எனக்கு போதை ஏறுது டாடி, என்று சந்தோஷமாக கத்தி சொல்லி சரக்கு பாட்டிலே எடுத்துக்காட்டி துள்ளி குதிக்கிறார். இது உங்களுக்கு எப்படி கிடைச்சது சார் என்று நந்தினி கேட்க அது சர்ப்ரைஸ் என்று சொல்லுகிறார்.

இது உனக்கு எப்படி வந்தது என்று கேட்ட அருணாச்சலம் நந்தினி இடம் வெளியே போனானா என்று கேட்க வெளியே எங்கேயும் போகல என்று சொல்லுகிறார். இது எப்படி வந்தது என்று சூர்யாவிடம் கேட்க சூர்யா தத்துவம் சொல்லி, இவன் உள்ளுக்குள்ள இருந்தா அவனைப் பார்த்து நான் எக்ஸைட்மெண்ட் ஆயிட்டேன் என்று சந்தோஷமாக பேச அருணாச்சலம் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா உயிர் போகிற நிலைமையில் இருந்துட்டு இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று திட்டுகிறார். நீ அடிக்ட் ஆயிட்டு இருக்கியா என்று கோபப்பட்டு பேசுகிறார். ஒரு பத்து நாள் கூட உன்னால குடிக்காம இருக்க முடியாதா என்று கேட்க பத்து நாளா என்னால முடியவே முடியாது என்று சூர்யா சொல்லுகிறார். உன்ன சொல்லி எந்த பிரயோஜனமும் இல்ல நீ குடிக்க ஆரம்பிச்ச அப்பவே உன்னை கைய கால கட்டி ரூம்ல அடைச்சுருக்கணும், கொஞ்சமாவது சுத்தி இருக்கிறவங்கள நெனச்சு பாக்கணும் ஆனா உனக்கு அதெல்லாம் எதுவுமே கிடையாது உன்னை எப்படியாவது திருத்திடலாம் நினைச்சேன் ஆனா அது முடியாது என சொல்லிவிட்டு அருணாச்சலம் கோபமாக சென்றுவிட சூரியா அவரை சாப்பிட கூப்பிட்டோம் அவர் கண்டுகொள்ளாமல் சென்று விடுகிறார்.

உடனே சூர்யா நந்தினியுடம் நீ செஞ்ச நண்டு நாட்டுக்கோழி எல்லாம் எடுத்துக்கிட்டு வா என்று சொல்லி சாப்பிட உட்காருகிறார். மாதவி இவ கைல எப்படி சரக்கு வந்தது என்று யோசிக்க எப்படியோ குடித்துவிட்டான் அவ்வளவுதான் என்று சுரேகா சொல்லுகிறார். நந்தினி எல்லாம் சொதப்பிடிச்சு அந்த பாட்டில் எப்படி ரூமுக்குள் வந்திருக்கும் என்று யோசிக்க, சூர்யா அசோகனை கூப்பிட்டு சாப்பிட உட்கார வைக்கிறார். அசோகன் நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன் நீ சாப்பிடு மாப்ள என்று சொல்ல, அசோகன் வேண்டாம் என சொல்லிக் கொண்டே இருக்க நான் ஊட்டி விடுறேன் ஊட்டி விடுறேன் என வாயில் அப்பி விடுகிறார். முகத்தில் காரம் பட்டுவிட அவர் எரியுது எரியுது என எழுந்து ஓடுகிறார் இருந்தாலும் பரவாயில்லை நான் மாமா ஊட்டி விடுவேன் என்று அசோகனை துரத்திக் கொண்டு போக அவர் ஓடிவிட மாதவி சுரேகாவிற்கு ஊட்டப் போக அவர்களும் தெறித்து ஓடுகின்றன. நந்தினிக்கு ஊட்டப் போக நந்தினி ஓடி விடுகிறார். நானே சாப்பிடுறேன் என்று உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே குடிக்கிறார் சூர்யா.

மறுபக்கம் நந்தினியும் கல்யாணமும் தனியாக உட்கார்ந்து சூரியா குடித்த விஷயத்தை பற்றி பேசுகின்றனர். நான் கண்ணும் கருத்துமா கஷ்டப்பட்டு பார்த்துகிட்டேன் அதையும் மீறி அந்த ரூமுக்குள்ள சரக்கு பாட்டில் எப்படி போச்சுன்னு தெரியல என்று சொல்லுகிறார். சரக்கு அடிக்கிறவங்க எப்பவுமே சரக்கு அடிக்கும்போது கொஞ்சம் சரக்கு எடுத்து மறைச்சு வைப்பாங்க அவங்களுக்கு தேவைப்படும்போது குடிச்சி இருப்பாங்க அது மாதிரி தான் இருக்கும் என சொல்லுகிறார். நீ ஒருவாட்டி முயற்சி பண்ணா ஐயாவ திருத்த முடியாது நீ முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும் என்று சொல்ல, அதற்கு நந்தினி அட போங்கன்ன இப்படி தான் மெட்ராஸ்ல ஒருத்தர் குடிச்சுக்கிட்டே இருப்பார் அவர திருத்த தான் எங்க அம்மா பெத்து போட்டாங்களா என்று சொல்லிவிட்டு மனம் தளர்ந்து விடுகிறார்.

அருணாச்சலம் வந்து என்னம்மா சூர்யா குடித்ததை நெனச்சு யோசிச்சுகிட்டு இருக்கியா என்று சொல்ல ஒரு தடவை இது மாதிரி ஆயிடுச்சு நினைக்காதம்மா முயற்சி பண்ணி பார்ப்போம் நீ போய் தூங்குமா என்று சொல்ல கல்யாணமும் ஐயா தான் சொல்லிட்டாரு இல்ல நீ கவலைப்படாம போய் படுமா பாத்துக்கலாம் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். கோவிலுக்கு வந்த அருணாச்சலம் சாமி கும்பிட்டு விட்டு உட்கார்ந்து இருக்க அங்கு ஒரு ஜோடி குழந்தையுடன் உட்கார்ந்து பேசி விளையாடுகின்றனர் அதை பார்த்து அருணாச்சலம், நம்ம சூர்யாவும் நந்தினியும் இது மாதிரி சந்தோஷமான வாழ்க்க அமைந்திருந்தால் குழந்தை குட்டியோடு இருந்திருப்பாங்க என்று நினைக்கிறார். அப்போது சாமியார் ஒருவர் வந்து என்ன அருணாச்சலம் அப்போதிலிருந்து நான் கையை காட்டி கூப்பிடுறேன் நீங்க கண்டுக்கவே இல்ல என்று சொல்ல இல்ல சாமி கவனிக்கல என்று சொல்லுகிறார். ஒருத்தர் கூப்பிடுறது கேக்காம யோசிக்கிறாங்க என்றால் அவங்க மனசுல குழப்பம் இருக்குதுன்னு அர்த்தம் சரிதானே என்று கேட்கிறார்.

உதடு சிரிக்குது ஆனா உள்ளம் அழுகுது எல்லாம் மனுஷங்களுக்கும் அதுதானே என்று சொல்ல அந்த குடும்பத்தை காட்டி அங்க பாருங்க குடும்பத்தோட கோவிலுக்கு வந்து குழந்தையோட விளையாடி சந்தோஷமா இருக்காங்க வேற என்ன வேணும் இந்த நிம்மதி போதாதா என்று சொல்ல உனக்கு என்ன ஆச்சு உனக்கு என்ன நிம்மதி இல்லை என்று கேட்க, எனக்கு ஒரே ஒரு ஆம்பள புள்ள அவன் கல்யாணம் வரைக்கும் போயி வேற ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டான். அவ ஒரு பக்கம் போறான் என் மருமகள் ஒரு பக்கம் போறா இதுல என் பொண்டாட்டி பிரச்சனை பண்றா அவங்கள சேர்த்து வைக்க நான் எடுக்குற ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில தான் முடியுது. எனக்கு பெரிய ஆசை எல்லாம் ஒன்னும் இல்லை ஆண்டவன் சொத்தை போதும் போதும் என்ற அளவுக்கு கொடுத்துட்டான், எனக்கு என் பையன் அந்த குடும்பம் மாதிரி ஊர் உலகத்துல சராசரியான மனிதனா வாழனும் என்று சொல்லுகிறார். நந்தினிக்கு இந்த வீட்டோட மருமகளா இருக்கிற எண்ணம் இல்ல. சூர்யாவுக்கு நந்தினி பொண்டாட்டியா ஏத்துக்கிற எண்ணமே இல்ல சுந்தரவல்லிக்கு நந்தினி எப்படியாவது தொரத்தனும் என்று யோசிக்கிறார். இதுக்கெல்லாம் நான் ஒரு தீர்வு சொல்றேன் என்று சொல்லிவிட்டு என் மகனும் மருமகளும் ஒண்ணா வாழ்ந்து குழந்தை பெத்துக்கிட்டாங்கன்னா இருக்கிற எல்லா பிரச்சனையும் தீர்ந்து போயிடும் நீ எல்லார் பக்கம் இருக்குற பிரச்சனையை பேசும்போது பெரிசா தெரியுது ஆனா உன் பையனும் மருமகளும் ஒன்று சேர்ந்து வாழ்ந்த அவங்க புரிஞ்சிப்பாங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் அருணாச்சலமும் அந்த குடும்பத்தை பார்த்து சந்தோஷப்பட்டு நிற்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் விக்ரம் சூர்யாவை ரிசார்ட்டுக்கு கூப்பிட நீங்க போயி சாப்பிட்டு தூங்குங்க நான் எதுக்கு உங்க கூட வரணும் என்று கேட்கிறார். நான் அங்க தனியா இருக்கணும் நந்தினி கூட்டிட்டு வந்தா நாங்க பேசிட்டு இருப்போம் இல்ல என சொல்ல சூர்யா யோசிக்கிறார்.

நந்தினி விஜியிடம் இந்த வீட்ல சும்மாவே பிரச்சனை வருது ஊருக்கெல்லாம் வந்தேன்னா அவ்வளவுதான் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today promo update 27-02-25
moondru mudichu serial today promo update 27-02-25