சீதாவிடம் காதலை சொன்ன அருண், ரோகினிக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
சீதாவிடம் அருண் காதலை சொல்ல, ரோகினிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது,

siragadikka asai serial today episode update 27-02-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் விஜயா இருவரும் வயிற்று வலியில் துடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க அண்ணாமலை வந்து கேட்கிறார் தூக்கம் வரல பேசிகிட்டு இருக்கோம் என முதலில் சொன்ன விஜயா பிறகு மனோஜ் வயிறு வலி இருப்பதை சொல்லுகிறார். அண்ணாமலை சத்தம் கேட்டு இருந்த மீனா முத்துவை எழுப்ப அவர் அலறி அடித்து எழுந்து கொள்கிறார். என்னாச்சு மீனா என்று கேட்க மாமா அத்தை பேசுற குரல் கேட்கிறது என சொல்லி எழுந்து வருகின்றனர்.
என்னாச்சுப்பா என்று கேட்ட இவங்களுக்கு வயிறு வலி என்று சொல்றாங்க என்று சொல்லுகிறார். மனோஜ் வயித்துல சத்தம் வருது என்று சொல்ல என்ன சத்தம் வருது என்று கேட்கிறார் முத்து மனோஜ் கடகடவென வருது என்று சொல்ல உடனே விஜயாவிடம் உங்களுக்கும் அதே மாதிரி வருதா சேம் பிரச்சனையான தெரிஞ்சுக்கலாமே என்று கேட்டேன் என்று சொல்லி கிண்டல் அடிக்கிறார். அதற்குள் ரோகினி வர கொஞ்ச நேரத்தில் ரவி ஸ்ருதி இருவரும் வந்து விடுகின்றனர். ஸ்ருதி தேவையில்லாம நார்மலா சாப்பிட வேண்டிய ஃபுட்ட விட்டுட்டு திடீர்ன்னு இப்படித்தான் ஆகும் செட்டாகாது என்று சொல்லுகிறார்.
உடனே விஜயா மற்றும் மனோஜின் முகம் மாறுகிறது. உடனே மீனா எங்க அம்மா கிட்ட வைத்தியம் கேட்டு செஞ்சிட்டு வரேன் என்று சொல்லி, தண்ணியில் சக்கரை உப்பு போட்டு எடுத்து வந்து கொடுக்கிறார். அதை குடித்துவிட்டு முத்து உப்பு சர்க்கரையை சேர்க்கக்கூடாது நாங்க ஆனா உங்களுக்கு வந்து பிரச்சனைய அதுதான் சரி செய்து என சொல்லுகிறார். இது எல்லாத்துக்கும் காரணம் மீனாதான் என்று விஜயா பழி போட அவதான் ஏதோ கலந்து கொடுத்துட்டா என்று சொல்லுகிறார். இனிமே நம்மளுக்கு டயட் வேண்டாம் என இருவரும் முடிவு எடுக்கின்றனர். உடனே அண்ணாமலை இப்போ உனக்கு பரவால்ல இல்ல வா போய் படுக்கலாம் என விஜய் அவை அழைத்து செல்ல ரோகிணி மனோஜை அழைத்து செல்கிறார்.
மறுபக்கம் மீனா நடந்த விஷயங்களை தம்பி தங்கையிடம் கோவிலில் சொல்லிக் கொண்டதற்கு அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். மீனாவின் அம்மா உன் மாமியாருக்கு இந்த வயசுல எதுக்கு இந்த வேலை என்று கேட்கிறார். அவங்க யார்கிட்டயும் சேலஞ்ச் பண்ணி இப்படி பண்ணிட்டாங்க விடுங்க என சொல்லாத நேரம் பார்த்து மீனாவுக்கு போன் வர உடனே சென்று விடுகிறார் சத்யாவும் சென்று விட சீதாவும், அம்மாவும் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அருண் அவர் அம்மாவை கூட்டிக்கொண்டு கோவிலுக்கு வருகிறார்.அங்கு சீதாவை பார்க்க இந்த கோயில்ல தான் இவங்க அம்மா வேலை செய்து கொண்டு இருப்பதாக சொன்னாங்க என்று சொல்லி வருகின்றனர். நேராக வந்து சீதாவிடம் பேச அவர் சீதாவிற்கு நன்றி சொல்கிறார் எதற்கு என்று கேட்க நீங்க இல்லனா எங்க அம்மாவை என்னால பாத்துக்க முடியாது என்று சொல்லி விட்டு அவங்க அம்மாவை அறிமுகம் செய்து வைக்கின்றனர்.
உடனே அர்ச்சனை தட்டு எடுத்துக்கொண்டு கோவிலுக்குள் சென்று அர்ச்சகரை பார்த்த விஷயத்தை சொல்லி அவர்களுக்கு அர்ச்சனை செய்து கொடுக்க சொல்லுகிறார். முடிந்த பிறகு அருண் அம்மாவும் சீதா அம்மாவும் முன்னாள் நடந்து போக, அருண் சீதாவிடம் கொஞ்சம் பேசணும் என்று தனியாக கூப்பிடுகிறார் எனக்கு ஒளிச்சு மறைச்சு எல்லாம் பேச தெரியாது எனக்கு உங்களை புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்கிறார் சீதா அதிர்ச்சியாக நிற்க என்ன திடீர்னு இப்படி கேக்குறீங்க என்று கேட்கிறார். உன் கூட சேர்ந்து வாழ்ந்தால் என் லைஃப் நல்லா இருக்கும்னு தோணுது என சொல்ல கோவில் மணி அடிக்கிறது. எனக்கு இப்போதைக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல, வேலைக்கு போகணும் அம்மா பாக்கணும் தம்பி படிக்கிறான் குடும்பத்த ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும் என்று சொல்ல இதில் கூட உங்க பொறுப்பு தான் தெரியுது என்று சொல்லுகிறார். இது எங்க அம்மாவுக்கு கூட தெரியாது அவங்கள சொல்லி ஏமாத்த விரும்பல அதனால நீங்க விருப்பத்தை சொன்னீங்கன்னா அப்புறம் நான் எங்க அம்மாகிட்ட சொல்லிப்பேன் என்று சொல்ல எனக்கு கொஞ்சம் டைம் வேணும் என்று சொல்லுகிறார். கண்டிப்பா டைம் எடுத்து சொல்லுங்க என சொல்லுகிறார்.பிறகு அவர்கள் அம்மாக்கள் வந்துவிட சென்று விடுகின்றனர்.
ரோகினி ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்க கறிக்கடைக்காரர் மணி வருகிறார் அவரைப் பார்த்து ரோகினி அதிர்ச்சியாக நீங்க எதுக்கு வந்திருக்கீங்க என்று கேட்கிறார். அவர் என்ன சொல்லுகிறார்? அதற்கு ரோகினி பதில் என்ன? முத்து அவரை கண்டுபிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

siragadikka asai serial today episode update 27-02-25