Web Ad 2

ஆகாஷ் மீது செல்விக்கு வந்த சந்தேகம், உணர்ச்சிபூர்வமாக கடிதத்தை எழுதி இருக்கும் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஆகாஷ் மற்றும் இனியா இருவரும் தனியாக நின்று பேசிக் கொண்டிருக்க செல்விக்கு சந்தேகம் வருகிறது.

baakiyalakshimi serial today episode update 27-02-25
baakiyalakshimi serial today episode update 27-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா ஈஸ்வரிக்கு போன் போட்டு வீட்டுக்கு போய்ட்டீங்களா பாட்டி என்று கேட்க என்ன உங்க அம்மா கேட்க சொன்னாளா என்று கேட்கிறார். உடனே கோபி இனியா கிட்ட எதுக்குமா கோவிச்சு இருக்கீங்க அவ என்ன பண்ணா என்று போனை வாங்கி இனியாவிடம் இங்கே ஒன்னும் பிரச்சனை இல்ல நானும் பாட்டியும் சேஃபா வீட்டுக்கு வந்துட்டோம் நீங்க பார்ட்டியை என்ஜாய் பண்ணுங்க என்று சொல்லி போனை வைக்கிறார்.உடனே ஈஸ்வரி பாக்யா முன்ன மாதிரி இல்ல இப்போ எதிர்த்து பேசுற ரெஸ்டாரன்ட் ரெண்டு ஓபன் பண்ணிட்டா கைல காசு பாக்குறதுனால மதிக்க மாட்டேங்குற அவகிட்ட இருந்து நான் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கல என்று சொல்லுகிறார்.

அதற்கு கோபி பாக்கியாவுக்கு நான் வேணா என்பதில் உறுதியாக இருக்கா? அவகிட்ட நீங்க இந்த மாதிரி ஒரு விஷயம் சொல்ல போறேன்னு சொல்லி பர்மிஷன் கேட்டீங்களா என்று கேட்க எல்லாரும் கிப்ட் கொடுத்தாங்க நானும் கொடுத்தேன் அவ்வளவுதான் ஆனால் அவன் இப்படி சொல்லுவாரு நான் நினைக்கல என்று சொல்லுகிறார். அதற்கு கோபி யாரையுமே கட்டாயப்படுத்தி வாழவைக்க முடியாதுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்மா அதனால விட்டுடுங்க என்று சொல்லுகிறார்.உங்களுக்கு ஏதாவது காபி டீ ஆர்டர் பண்ணுவா என்று கேட்க எனக்கு எதுவும் வேண்டாம் என சொல்லிவிடுகிறார் பிறகு அங்கிருந்து கோபி கிச்சனுக்கு வந்து தண்ணீர் குடிக்க பாக்யா செல்ஃபில் கோபி வைத்த கிப்டை பார்க்கிறார்.

அந்த கவர் எடுத்து கொண்டு வந்து வைத்து அதில் இருக்கும் கிப்ட் பார்த்து பிடித்து கூட பார்க்கணும்னு தோணலையா என்று நினைத்து விட்டு நீ எதுக்கு பாக்கணும் என்று அவரே சொல்லிக் கொள்கிறார் பிறகு அதில் ஒரு லெட்டர் ஒன்றை கோபி எழுதி வைத்திருக்கிறார் அதனை அவரே பிரித்து படித்துப் பார்க்கிறார். அதில் நான் உனக்கு கல்யாணம் ஆனதிலிருந்து இதுவரைக்கும் பிறந்தநாள் வாழ்த்து கிப்டோ பண்ணது கிடையாது ஏன் உன்னோட பிறந்தநாள் கூட எப்பன்னு எனக்கு தெரியாது, உன்ன நா ரொம்ப திட்டி இருக்க பேசி இருக்க உன்ன புடிக்காம தான் உன் கூட வாழ்ந்துகிட்டு இருந்த ஆனா உன்ன விட்டு பிரிஞ்சு போகும்போது தான் உன்னோட அருமை என்னன்னு எனக்கு புரிஞ்சது இப்போ ராதிகா என்ன விட்டு போயிட்டாங்க அதனாலயே இல்ல நான் இந்த வீட்டிலேயே இருக்கணும்ன்றதுக்காகையோ நான் இதை உன்கிட்ட சொல்லல என்று முதல் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.

மறுபக்கத்தில் நீ வேற ஒரு ஆளா மாறி நிக்குற நீ சந்திச்ச கஷ்டங்கள் துரோகங்கள் எல்லாம் ரொம்ப அதிகம் நீ உனக்கும் உன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கு உண்மையா இருந்திருக்க, உன்ன பாக்க எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு பாக்கியா, நீ எங்க அப்பா அம்மாவ நல்லா பாத்துகிட்ட, எங்க அம்மா மேல மரியாதையா இருக்கா நம்ம பசங்கள நல்லா பாத்துக்குறேன் பிசினஸ் பண்ற பல பேருக்கு வேலை கொடுத்து இருக்க என பாக்யாவை பாராட்டி எழுதி இருக்கிறார். இதுதான் நான் உனக்கு சொல்றேன் முதல் பிறந்தநாள் வாழ்த்தா கூட இருக்கலாம் ஹாப்பி பர்த்டே பாக்யா என்று சொல்லியுள்ளார்.

அதனை படித்துவிட்டு அந்த பைக்குள் வைத்துவிட்டு அதை அவரே எடுத்துச் சென்று விடுகிறார். பிறகு பாக்கியா ரெஸ்டாரண்டில் ராதிகாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார் ராதிகா பாக்யவிடம் நீங்க எனக்காக இந்த முடிவு எடுத்தீங்களா என்று கேட்காத நான் திருப்பி கேட்டால் நீங்க என்ன சொல்லுவீங்க என்று கேட்கிறார் நான் முடிவு மாத்திக்க மாட்டேன் என்று சொன்ன அதேதான் நானும் நான் யாருக்காகவும் இல்லை எனக்காக இந்த முடிவு எடுத்து இருக்கேன் எனக்கு அவர் கூட வாழ விருப்பம் இல்லை என்று சொல்லுகிறார். பிறகு ராதிகா சரி எனக்கு டைம் ஆயிடுச்சு கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு ஒரு நாள் பெங்களூர் வாங்க என்று சொல்லி சென்று விடுகிறார். பிறகு பாக்கிய அனைவரையும் அனுப்பிவிட கடைசியாக குடும்பத்தினர் மட்டும் இருக்கின்றனர் இனியா கிப்ட் எல்லாம் அதிகமா இருக்குமா என்று சொல்ல அப்படியா என்று பாக்யா கேட்கிறார் பிறகு எழில் நானும் கிளம்புறோமா என்று சொல்ல சரி நீ கிளம்பு நான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லுகிறார் நான் வீட்ல டிராப் பண்ணவா என்று சொல்ல நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார் இல்ல நாங்களே போய்க்கிறோம் என்று பாக்கியா சொல்ல ஜெனி கார் வாங்க போறதா சொல்லிக்கிட்டு இருந்தீங்களே எப்போ என்று கேட்க கூடிய சீக்கிரம் வாங்குற பிளான் இருக்கு என்று சொல்லுகிறார்.

செழியன் கார்கூடவே பாட்டி சொன்னதையே கொஞ்சம் யோசிச்சு பாருங்க என்று சொல்ல எழில் எதை சொல்ற என்று கேட்கிறார் கொஞ்சம் அமைதியா இரு எழில் நான் சொல்லிவிட்டு செழியன் இடம் பாக்யா உங்க அப்பா கூட சேர்ந்து வாழ எனக்கு விருப்பமில்லை என்று சொல்ல முன்ன மாதிரி இல்ல அவர் மாறிட்டாரு என்று சொல்ல அதற்கு எழில் மாறிட்டாரு தான் நான் இல்லன்னு சொல்லல என்று சொல்ல பாக்கியா நான் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு இவ்வளவு நாள் கழிச்சு என்னோட கனவு ஆசையெல்லாம் நான் நிறைவேற்றி இருக்க அன்பு காற்ற அக்கறை காற்றன அந்த ஆசையே என் கையில் இருந்து பறிச்சுராதீங்க என்று சொல்லுகிறார்.

எல்லாரும் பங்ஷன்ல வந்து கலந்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி என சொல்ல அனைவரும் சொல்லிவிட்டு கிளம்புகின்றனர் உடனே செல்வி மற்றும் ஆகாஷ் இருவரும் வந்து எல்லாரும் கிளம்பிட்டாங்களா அக்கா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார். பாக்கியா செல்வியிடம் எனக்கு காபி குடிக்கணும் போல இருக்கு குடிக்கலாமா என்று கேட்க செல்வியும் சரிக்கா என்று சொல்லுகிறார் பாக்யா ஆகாஷிடம் கேட்க வேண்டாம் என்று சொல்ல இனியாவும் வேண்டாம் என்று சொல்லுகிறார். ஆகாஷ் இனியா என்ன பேசிக் கொள்கிறார்கள்?செல்வி ஆகாஷிடம் என்ன கேட்கிறார்? பாக்யாவிடம் ஈஸ்வரியின் கேள்வி என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 27-02-25
baakiyalakshimi serial today episode update 27-02-25